பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

196 ஆழ்வார்கள் காலநிலை களிலே இச்சோழன் அடைந்த வெற்றித்திறம் இற்றென விளங்கும். விளந்தை வேள் என்ற சிற்றரசனொருவன், செங்கணானுக்குப் பெரும் பகைவனாயிருந்தனன் என்றும், அவனைப் போரொன்றிலே தன் வேலைச் செலுத்தி உயிர்தொலைத்துப் பின் முத்தமிழ்நாட்டுக்குக் தனியரசன் தானேயாய் உலகமாண்டனன் இச்சோழன் என்றும் - மின்னாடு வேலேந்து விளந்தை வேளை ! விண்ணேறத் தனிவேலுய்த் துலக மாண்ட தென்னாடன் குடகொங்கன் சோழன் சேர்ந்த திருநறையூர் மணிமாடஞ் சேர்மின்களே " (பெ. தி. 6, 6, 6) என்ற தொடர்களால் ஆழ்வார் தெரிவித்தல் அறியத் தக்கது. விளந்தை என்பது திருச்சிராப்பள்ளி ஜில்லா உடையார் பாளயத்தை யடுத்துக்கோட்டை முதலிய பழைய சின்னங்களுடன் இன்றும் உள்ளதோர் ஊராம். மேற்குறித்த போர்களிலே செங்கணான் வெற்றிபெறுதல் வேண்டித் திருநறையூர்த் திருமால் அவற்குத் தெய்வ வாளொன்று உதவினர் என்பர் முன்னோர். 2 இச்சோழன் முற்பிறவியிற் சிலந்தியாய்ப் பிறந்து திருவானைக்காவிலுள்ள சிவலிங்கத்துக்குத் தன் 1. ' விளைந்தவேளை' என்று இப்போது வழங்கும் பாடம், அது 'விளந்தைவேளை' என்று திருத்திக் கொள்ளற்குரியது. 2. பெரிய திருமொழி, 6, 6, 3-ம் பாசுர வியாக்யானம்.) 3. சிலந்தியு மானைக்காவிற் றிருநிழற் பந்தர் செய்து, உலந்தவணிறந்த போதே கோச்செங்க ணனுமாகக், கலந்த நீர்க் காவிரிசூழ் சோணாட்டுச் சோழர் தங்கள், குலந்தனிற் பிறப்பித் திட்டார் குறுக்கை வீரட்டனாரே" (தேவா. குறுக்கை ,'அப். 4.)