பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/250

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஏழாம் அதிகாரம் தொண்டரடிப்பொடியாழ்வார் பிறப்பும் வாழ்வும் சோணாட்டில் காவிரிக்கரையிலுள்ள மண்டங்குடி! என்ற ஊரிலே புரச்சூடரான பிராமணோத்தமர் குலித் தில் அவதரித்து ஸ்ரீவிப்பிரநாராயணர் என்ற திருநாம முடையராய் வாழ்ந்த இப்பெரியார் திருவரங்கத்தில் துளசித்திருநந்தவனம் வைத்துவளர்த்து அந்நகரத் தெம்பெருமானுக்குத் திருமாலைத் தொண்டு புரிந்து வந்தவர் என்றும், அக்காலத்தே தேவதாசி யொருத்தி யின் மோகத்தில் இவர் மூழ்கும்படி நேரத் திருவரங்க முடையான் இவரை அக்காதலினின்று நீக்கி உய்யக் கொண்டருளினர் என்றும் வழங்கும் சரித்திரம் மிகப் பிரபலமானதாகும், இவர் அருளிச்செய்த திவ்வியப்பிரபந்தங்கள்: - திரு மாலை, திருப்பள்ளியெழுச்சி என்பன. இப்பெரியார் வரலாறு, இவர் அருளிச் செயல் களினும் குறிப்பிடப்படுகின்றது. சிற்றின்பத்தே மூழ்கிக் கிடந்த தம்மைத் திருவரங்கப் பெருமான் தம் நிரே துக பரமகிருபையால் உய்யக்கொண்டருளிய செய்தியை 1. தஞ்சாவூர் ஜில்லாவில் உள்ள து (I. M. P. Tj. 1405). இந்தக் கிராமம் எழுநூறு பிராமணர்களை உடையதாயிருந்த தென்று திவ்யசூரிசரிதம் கூறும். (பக். 42).