பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சடகோபரும் அவர் அருளிச்செயல்களும் 283 மேற்குறித்த பிரபத்தி நெறியில் நின்று பேறு பெற் றவர்களே, அன்னோரைப் பின்பற்றித் தம் பக்திப் பெருக்கைச் செலுத்துவதற்கு இவ்வாழ்வார் பெரிதும் உவந்தருளிய மூர்த்தி கண்ணபிரானே ஆவார். 'துயரின் மலியும் மனிசர் பிறவியுள் தோன்றி, கண் காண வந்து, துயரங்கள் செய்து தன் தெய்வ' நிலை உலகிற்புக உய்க்கும் அம்மான்' அன்றோ அவர்? ஆகவே, அப்பெருமானிடம் இவர் காட்டிய காதல் வெள் ளத்துக்கு ஓரளவே இல்லை. பிருந்தாவனத்தில் கோபி யாரிடம் காட்டிய பிரேமாவிலாசத்தை அப்பெருமானும் இவரிடம் நிகழ்த்தி மகிழ்ந்தவனே, இவ்வாறு கண் ணனைத் தாம் சிறப்பாகப் பற்றுதற்கு அவன் தன் மனத்துள் நின்றுகொண்டு தன் காரியமாகவே எனக்கே யாட்செய் எக்காலத்தும்' என்று இடைவிடாது உணர்த்தி வருதலே காரணம் என்கின்றார் இவ்வாழ்வார்.

  • எனக்கே யாட்செயெக் காலத்து மென்றென் மனக்கே யாகவந்து இடையீடின்றி மன்னி தனக்கே வாகஎனைக் கொள்ளு மீதே எனக்கே கண்ணனை யான்கொள் சிறப்பே' (2-7-4)

இவ்வாறு பகவானது அருள்மழை ஆழ்வாரிடம் தேங்கிய நிலையில், அவனும் இவரும் தாயும் குழந்தையும் போலவும், உத்தம நாயக நாயகியர் போலவும் ஒருவரை யொருவர் ஆர்வத்தோடு பருகியும், சிறிது பிரியினும் தரிக்க மாட்ட-து புல்லியும், கூடி அனுபவிக்கும் நிலையில் தன்வச மற்றும் புகழ்ந்து பாடியும் ஈடுபட்டு நிற்கும் திறம் நம்மால் எழுதுந்தரத் தன்று .