பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

314 ஆழ்வார்கள் காலநிலை உத்தேசிய இன்பமானது, ஐகிகமான சிற்றின்பத்தின் வேறானது என்பது பெறப்படுதலால், பெரியவாச்சான் பிள்ளை திருவுள்ளத்துக்கும் மேற்கூறிய கருத்து மாறு படாமை காண்க. இதனால், 'பாரோர் சொலப்பட்ட அச்சிற்றின்பப்பேற்றுக்குப் பொருள்கருவியாவது என்ற ஆழ்வார்திருவாக்குப் பொருந்துமாறு அறியத்தக்கது. 17, பெரிய திருமடலில் வேகவதி என்பவளது வரலாற்றைத் திருமங்கைமன்னன்-- “பின்னும், கருநெடுங்கட் செவ்வாய்ப் பிணைநோக்கின் மின்னனைய நுண் மருங்குல் வேகவதி யென்றுரைக்கும் கன்னிதன் இன்னுயிராங் காதலனைக் காணாது தன்னுடைய முன்தோன்றல் கொண்டேகத் தான் சென்றங்கு அன்னவனை நோக்கா தழித்துரப்பி வாளமருள் கன்னவில்தோட் காளையைக் கைப்பிடித்து மீண்டும் போய்ட் பொன்னவிலும் ஆகம் புணர்ந்திலளே என்ற கண்ணிகளிற் கூறுவர். இங்கு, பெரியவாச்சான் பிள்ளை அருளிய வியாக்யானத் தின்பதிப்பில் ( இதற்குக் கதை தெரியவில்லை" என்ற கீழ்க்குறிப்பு இடப்பட்டுளது, ஊகமாகக் கதை கற்பித்தாரும் உளர். ஆனால், குணாட்யரது பிருஹத்கதையின் வழி நூலான பெருங்கதையிலும். வடமொழியிலுள்ள 1. பெருங்கதை நரவாணகாண்டத்தின் பிற்பகுதி, கிடையாமையால் உதிதோதயகாவ்யம் முதலிய வடநூல் களிலிருந்து அப்பிற்பகுதிக்கதையை, உதயனன் சரித்திரச் சுருக்கத்தில் மஹா மஹோபாத்யாய-ஐயரவர்கள் எழுதியுள் ளார்கள். அக்கதாபாகத்தில், வேகவதி வரலாறு சிறு மாறு பாடுகளுடன் காணப்படுகின்றது (பக்- 119-201).