பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/353

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

343 அருளிச் செயற் பாடவமைதி 40. பெரியதிருமொழி 6-10-1ஆம் பாசுரத்தில் எறிஞர் அரணழியக் கடந்ததம்பி" என்பதனுள் 'எறிஞர்' என்பதை இரிஞர் என்று திருத்திப் படிக்க. அரிஞர் - பகைவர் என்பது திவாகரம். இரிஞர் மகளிர் இலை ஞ்ெமலுளீன்ற, வரியிளஞ் செங்காற் குழவி" என்றார் முத்தொள்ளாயிரத்தும், எறிஞர் என்ற வழக்கு முன்னூல்களிற் பயிலாதது. இகர எகரங்களும், ரகர றகரங்களும் ஓதுமுறையிலும் எழுது முறையிலும் மாறிய இடங்கள் பலவாம். 41. பெரிய திருமொழி 6-9-10 ஆம் பாசுரத்தில், “பண்களகம் பயின்றசீர்ப் பாடலிவை பத்தும் வ(ல்)லார் விண்களகத் திமையவராய் வீற்றிருந்து வாழ்வாரே எனபதனுள் விண்களகத்து' என்பது விண்கழகத்து' என்றோதல் சிறக்கும். விண் கழகம் - விண்ணுலகங்கட்கு ஓலக்கமண்டபமாய்த் தலைமைபெற்ற பரமபதம் எ - று. பரமபதத்துத் திருமாமணி மண்டபமெனினும் ஆம். தீபிகையாசிரியரால், (ஈற்றடியில் விண்கள் அகத்து' எனப்பிரித் துரைப்பதல்லாமல், விண் களகத்து' என்று கொண்டும் உரைக்கலாம். களம்+அத்து, களகத்து (நன்னூல் உருபு, 13); சபையின்கண் என்றபடி” என்று குறிப்புரை எழுதப்பட்டுள்ளது. இவ்வாறாயின், களம்+அத்து - களத்து என்று புணருமேயன்றிக் களகத்து என்று இடையில் கப்பிரத்யயம் வருதல் தமிழில் இல்லை. இப்பொருளும் புணர்ப்பும் பெரிய வாச்சான்பிள்ளை அருளிய பதபாடமும் அல்ல. ஆகவே, களகம் என்று முழுச்சொல்லாகவே கொள்ளத்தகும். பவழம் பவளம் முதலியனபோல, 'கழகம் களகங்கள் செய்யுளெதுகைகளில் வருதல் மரபேயாம்.