பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

ஆழ்வார்கள் காலநிலை “ வஞ்சி வெளிய குருகெல்லாம் பஞ்சவன் நான்மாடக் கூடலிற் கல்வலிது சோழ னுறந்தைக் கரும்பினிது தொண்டைமான் கச்சியுட் காக்கை கரிது." என்பது முதலியன, மூலர் பாடிய ஆரிடச் செய்யுள் :-- " இலைநல வாயினு மெட்டி பழுத்தாற் குலைநல வாங்கனி கொண்டுண லாகாது இளையாள், முலை நலங் கொண்டு முறுவலிக் கின்ற வினையுடை நெஞ்சினை வெய்துகொ ளீரே என்பது. பூதத்தாரும் காரைக்காற் பேயாருஞ் சேர்ந்து பாடிய ஆரிடச் செய்யுள்: “ கறைப்பற் பெருமோட்டுக் காடு கிழவோட் கரைத்திருந்த சாந்தைத்தொட் டப்பேய் மறைக்க வறியாது மற்றுந்தன் கையைக் குறைக்குமாங் கூன்கத்தி கொண்டு.” என்பது, இவற்றுட் பொய்கையார் பாடிய ஆரிடச் செய்யுள் தமிழரசர் நால்வரையும் பற்றித் தெரியலாம். மூலர் வாக்காகக் குறித்த ஆரிடப்பாட்டு திருமந்திரத்தில் 204-ம் செய்யுளாக உள்ளது. ஆனால், அவ்விருத்தியில் மிக்குவந்ததாகக் குறிக்கப்பட்ட கூன்சீர், இப்போதுள்ள திருமந்திரப் பதிப்புக்களிற் காணப்படவில்லை; அன்றியும், அப்பாடல் பாடபேதமுங் கொண்டுளது. இதனினின்று மூலரும் திருமூலரும் ஒருவரே என்பது அவ்விருத்திகாரர் கருத்தென்பது தெரியலாம். இனி அவ்விருத்தியில், காரைக்காற் பேயார், என்றும், காரைக்காற் பேயம்மையார் என்றும் 1. யாப்பருங்கல விருத்தி, 93 (பக். 350-52.)