பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/53

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

முதலாழ்வார் மூவர் 43: என்று . பொய்கையாரே கூறியவாறு, இளமையில் அரசர் போன்றவரைச் சார்ந்திருந்து, அன்னோர் காலம் போக்கிய குறிப்புப் புலப்படுதலாலும் இஃது அமைத் துக் கொள்ளத்தகும். இவ்வாறு, அரசர்க்கு நண்பராய் ஏதோ சந்தர்ப்பத் துக்கேற்ப அவர்களைப் பாடியிருத்தலால், போரிற் பிடிக்கப்பட்ட சேரனைச் சிறை நீக்கி உய்விப்பதற்காகச் சோழன் கோச் செங்கணானைக் களவழி நாற்பது என்ற நூலாற் புகழ்ந்த பொய்கையார், மேற்கூறிய தமிழ் முனிவரான பொய்கையாழ்வாராகவே இருத்தல் கூடும் என்பது என் கருத்து." இங்ஙனம் பாடியது, தம் பேரருளால் ஒருவனது துன்பநீக்கும் அறச்செயல்பற்றியதேயன்றிப் பரிசில் நோக்கிய தன்றென்பதும், பாடப்பட்ட, அரசன்," திருமங்கைமன்னன் புகழுமாறு, பாகவதசிரோமணி யென்பதும் நாம் தெரிந்துகொள்ளத்தக்கன. ஒருகால், களவழிபாடிய பொய்கையாரைப்பற்றிய முடிபு எத்த கையதாயினும், யாப்பருங்கல விருத்தியுடையார் கூறிய பொய்கையார் ஆழ்வாரின் வேறல்லர் என்பதே. முன்னோர் கருத்து என்பது ஒருதலையாமென்க. இப்பொய்கையார்வாக்காக மேலேகுறித்த நூல் களும் பாடல்களுமன்றி, புறநானூற்றுள் கோக்கோதை. மார்பன் என்ற சேரனைப் பற்றியுள்ள 48, 49-ம் பாடல் களும், கோச் செங்கணான் என்ற சோழனைப்பற்றியுள்ள 1. இன்னருளின், மேதக்க பொய்கை கவி கொண்டு வில்லவனைப், பாதத் தளைவிட்ட பார்த்திவனும் (விக்கிரம். சோழனுலா) என்று, கவிச்சக்கரவர்த்தியாகிய கூத்தரும் சேரமானைச் சிறை நீக்கிய பொய்கையாரது பெருங்கருணைத் திறத்தை விசேடித்துப் பாடியது நோக்கற்பாலது.