பக்கம்:ஆழ்வார்கள் காலநிலை.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பின்பற்றப் பெற்றது. இவ்வகையில் “ஆழ்வார்கள் காலநிலை"க்குத் தனி இடம் உண்டு. இக் காலத்தில் கூட்டு முயற்சி" ஆய்வுலகில வேண்டும் என்று வற்புறுத்துகின்றனர். ஆதலின் எண்ணிய கருத்துக்களைத் தக்காருடன் கலந்து முடிவு செய்யும் கூட்டாய்வு நெறி போற்றப்படுகின்றது. இந் நெறியை ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னரேயே போற் றியவர் மு. இராகவையங்கார். ஆண்டாள் தம் திருப் பாவையில் வெள்ளி எழுந்தது வியாழம் உறங்கிற்று என்று பாடுகின்றார். இக் குறிப்பைக் கொண்டு இக் காலம் கி. பி. 731 என்று மு. இராகவையங்கார் முடிவு செய்துள்ளார், இம்முடிவுக்காக இவர் அக்காலத்தில் காலக் கணிதத்தில் வல்லவராக விளங்கிய சௌமிய நாராயண ஐயங்கார், கே, ஜி, சேது ஐயர், கே. ஜி. சங்கர ஐயர், சோமசுந்தர தேசிகர் ஆகியோரைக் கலந்து தம் கருத்துக்கு அரண் செய்து கொண்டார் என்றால் இவரின் ஆய்வு வேட்கை வெளிப்படும். இவர் நடுநிலை ஆய்வாளர் வைணவர்களை மறந்தும் புறந்தொழா மாந்தர் என்பர். இவர் அந்நெறியினர் என்றாலும் சைவ நாயன்மார்களை மதித்த திறத்தினை ஆழ்வார்கள் காலநிலை காட்டுகின்றது. அவதரித்த சம் பந்த மூர்த்திகள் என்றும், ஏழாம் நூற்றாண்டில் சைன பௌத்தர்கள் தென்னாட்டில் மேலோங்கியிருந் தவர் என்பதும் அப்பரும் சம்பந்தரும் வாதாடி அவரது ஆதிக்கத்தைத் தொலைத்தவர்கள் என்பதும் சரித்திரப் பிரசித்தமானவை' என்றும் இவர் எழுதியிருப்பன இவரின் சமனிலை ஆய்வுக்குத் தக்க சான்றுகள். நாயன்மார் வரலாற்றில் மாணிக்கவாசகர் வர லாறும் காலமும் மிக விரிவானது. தமிழ்க்கடல் மறை மலையடிகள் இப்பொருள் குறித்துப் பெருநூலே படைத் தார். மாணிக்கவாசகர் வரலாறும் காலமும் போலவே ஆழ்வார்கள் வரலாற்றில் திருமங்கையாழ்வார் வர லாறும் காலமும் மிக விரிவானது. ஆதலின் மு. இராக வையங்கார் ஆழ்வார்கள் காலநிலையில் நூறு பக்கங்கள் இப்பொருள் பற்றி ஆராய்ந்துள்ளார். இவ்விரிவான