பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

என்று முஸ்லிம்கள் பெருமைப்படலாம்; அவர்களைவிட அவர் இந்தியர் என்று நாம் அனைவரும் பெருமிதம் கொள்கின்றோம். ஒரு மதத்திற்கோ, ஒரு சமயத்திற்கோ ஓர் இனத்திற்கோ உரியவர் அல்லர் அவர். அனைவர்க்கும் உறவானவர் அல்லாமா இக்பால்’ என்பது வாடியாவின் வாசகம். அந்த வானம்பாடி மறைந்தாலும், அதன் இதய கீதங்கள் இன்னும் நாடெங்கும் எதிரொளிக்கின்றன.