பக்கம்:இக்பால் இலக்கியமும் வாழ்வும்.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



     அழகின் உண்மை

     உலகம் ஓர் சித்திரச்சோலை - அதில்
     ஒப்பற்ற வாழ்க்கையே
     வண்ணப்பூஞ் சோலை!
     இலகும் இரவெனும் பாட்டு - உயிர்
     இசைத்திடும் வெவ்வேறு
     தாளங்கள் போட்டு!

     * * * * * *

     தோற்றங்கள் மாற்றங்கள் கொள்ளும் - பல
     தொல்எழில் வண்ணங்கள்
     தேனோடு விள்ளும்!
     மாற்றங்களால் எழில் வீழும் - அந்த
     மாற்றங்களாலேயே
     புத்தெழில் வாழும்.

83