உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதன் விலை ரூபாய் மூவாயிரம், அண்ணாதுரை.pdf/51

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

51



மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறதோ அவர் பக்கமே எப்போதும் அளிக்க வேண்டியதாயிருக்கிறது. ஐயப்பாடு எதுவும் நேரிடும் பட்சத்திலும், அதனாலாகிய சலுகையை மனுதாரரே பெறவகைசெய்யும் வழக்காகும் இது.

வேறு வழக்குகளின் தீர்ப்புகள் சில எங்கள் முன்பு எடுத்துக்காட்டப்பட்டன; ஆனால் தகராறுக்குரிய அக்குறிப்பிட்ட கட்டுரைகளின் வாசக அமைப்பையொட்டியே நாங்கள் தீர்ப்பு வழங்க வேண்டியிருப்பதால் அவற்றைப்பற்றி விவாதிக்கப் புகுவதால் பயன் எதுவும் ஏற்படுமென்று நாங்கள் கருதவில்லை.

இந்தியப் பத்திரிகை (அவசரச்) சட்ட 4 (1) (யெச்) பிரிவின் கீழ் விவரிக்கப்படுவதை யொத்த தன்மை வாய்ந்த சொற்கள் மேற்படி கட்டுரைகளில் இல்லையென நாங்கள் கருதுவதால் மனுதார் ரூ 3000 ஜாமீன் தொகை கட்டவேண்டுமென்று பணிக்கப்பட்ட மாகாண சர்க்கார் உத்தரவை தள்ளுபடி செய்கிறோம்.