பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/120

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அகா.. எனது சகாக்கள் அங்கு நின்றேன் - ஒரு புல்: கொண்டு போர்த்தி மூடினோம், அதன் முன் மெளனமாக நின்றோம். எனது சகாக்கள் எல்லோரும் மெளனமாகத் தத்தம் வழியில் போன பின்னரும் நான் அங்கு நின்றேன்; ஒரு வெறியில் இவ்வாறு முனகிக் கொண்டேன்: “பெளதிக பூகோளவியல்: பால்கோவும் போலோவின்கின்னும் எழுதியது. ஏழாம் அல்லது பத்தாம் ஆண்டுப் பள்ளிகளுக்கான பாடப் புத்தகம்.' இந்த வாசகங்களை அந்தச் சிறுமியின் பள்ளிக்கூடப் பையிலிருந்து) வெளியே வந்து விழுந்து கிடந்த புத்தகங்கள் ஒன்றின் அட்டை மீது நான் வாசித்தேன். எனக்கு அந்தப் பாடப்புத்தகம் நன்கு தெரியும், எனது மகளும் ஐந்தாம் படிவத்தில்தான் படித்து வந்தாள். "* ரூலினுக்கு அருகில்தான் இது நிகழ்ந்தது. இதன் பின் ஸ்கிவீராவுக்கு அருகிலும் ஒரு பள்ளத்தாக்கில் ஓர் இடத்தை நாங்கள் காண நேர்ந்தது. அங்கு ஜெர்மானியர்கள் தாம் கைதிகளாகப் பிடித்த சோவியத் போர்வீரர்களைச் சித்திரவதை செய்து கொன்று தீர்த்திருந்தனர், நீங்கள் கசாப்பு வெட்டும் இடத்தைப் பார்த்ததுண்டா? நல்லது. அந்த இடமும் அப்படித் தான் தோற்றமளித்தது. அந்தப் பள்ளத்தாக்கின் வழியே வளர்ந்தோங்கியிருந்த மரங்களின் கிளைகளில் கால்களோ அல்லது 33களோ இல்லாத, உடம்புத் தோலைப் பாதி வரையிலும் வெட்டிக் கிழித்த உடல்கள் தொங்கிக் கொண்டிருந்தன. எந்த உடற் பகுதி யாருக்குச் சொந்தமானது என்றே நம்மால் சொல்ல முடியாது. அவை யாவும் வெறுமனே பெரிய இறைச்சிக் குவியலாகத்தான் காட்சியளித்தன, அந்தக் குவியலின் உச்சியில் எட்டு சோவியத் பக்கவாட்டுத் தொப்பிகள், ஒன்றோடொன்று பொருந்தும் கோப்பைகளை அடுக்காக அடுக்கி வைத்ததுபோல் ஓன்முகப் பொருத்தி வைக்கப்பட்டிருந்தன. "' அங்கு தான் பார்த்ததையெல்லாம் ஒரு நபர் வார்த்தை களால் வருணிக்க - முடியும் என்று நீங்கள் நினைக்கிறீர்களா? முடியாது, அவரால் முடியவே முடியாது, அதற்கு வார்த்தை ஆளே கிடையாது. . இதனை அவரவர் தமது சொந்தக் கண்களால் பார்த்துத்தான் தெரிந்து கொள்ள வேண்டும். சரி, எவ்வாறாயினும், நாம் இந்த விஷயத்தை விட்டு விடுவோம் என்று கெராசிமோவ் சட்டென்று கூறிவிட்டு, நெடுநேரம் மெளனியாகி விட்டார்,

  • 'இங்கே' புகை பிடிக்கலாமா? என்று நான் அவரிடம்

கேட்டேன்,

நிச்சயமாக ஆயினும் கைக்குள் பொத்தி வைத்துக்

112