பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வருத்தப்பட்டோம். நாங்கள் பின்வாங்கி வரும்போது ஒருவர் கண்களை மற்றொருவர் கூர்ந்து நோக்க முடியாத அளவுக்கு நாங்கள் அதைப்பற்றி அத்தனை வருத்தமடைந்தோம். ",... நான் என்றாவது கைதியாக இருக்க வேண்டியிருக்கும் என்று நான் என்றுமே நினைத்துப் பார்த்ததில்லை. ஆனால் அவ்வாறு தான் இருந்தாக வேண்டிய நிலையே ஏற்பட்டுவிட்டது, நான் முதன் முதலில் செப்டம்பர் மாதத் தொடக்கத்தில் தான் காயமடைந்தேன், என்றாலும் அப்போதும் நான் படைகளோடு தான் இருந்து வந்தேன், போல் தவா பிரதேசத்தில் தெனி சோவ்காவில் நடந்த சண்டையின் போது, செப்டம்பர் 21 ஆம் தேதியன்று நான் இரண்டாம் முறையாகக் காயம் அடைந்தேன்; அப்போதுதான் நான் கைதியாக்கப்பட்டேன். "ஜெர்மன் டாங்கிகள் எங்களது இடப்புறப் பக்கவாட்டில் ஊடுருவிப் புகுந்தன; அவற்றைத் தொடர்ந்து அவர்களது காலாட் படைகளும் வந்தன. நாங்கள் முற்றுகையிலிருந்து விடுபட்டு வெளி வருவதற்காகப் போராடிக் கொண்டிருந்தோம், அன்று எனது கம்பெனிக்குப் பெருத்த சேதங்கள் நேர்ந்தன. நாங்கள் அவர்களது தாக்குதலை இருமுறை எதிர்த்தடித்தோம்; அவர்களது டாங்கிகளில் ஆறு டாங்கிகளையும், ஒரு கவச மோட்டார் காரையும் நெருப்புக்கு இரையாக்கினோம் ; ஹிட்லர் படையைச் சேர்ந்த சுமார் நூற்றியிருபது பேர்களை மக்காச்சோள வயல்களில் பிணமாக்கிக் குவித்தோம். ஆயினும் பின்னர் அவர்கள் தமது சிறு பீரங்கிப் படைகளைக் கொண்டு வந்து தாக்கினார்கள். எனவே நடுப் பகலிலிருந்து மாலை நாலு மணி வரையிலும் நாங்கள் விடாப்பிடியாகப் பிடித்து வைத்திருந்த மேட்டுப் பகுதியைக் கைவிட்டு விலகும் நிர்ப்பந்தத்துக்கு ஆளானோம். அதிகாலையிலிருந்தே புழுக்க மூட்டும் வெப்பம் அதிகமாக இருந்தது; வானத்தில் ஒரு மேகத்தைக்கூடக் காணோம்; சூரியனோ நாங்கள் கிட்டத்தட்ட திக்குமுக்கா: டி.ப் போகும் அளவுக்கு அத்தனை மூர்க்கமாகக் காய்ந்து கொண் டிருந்தது. குண்டுகள் நெருக்கமா கவும், விரைவாக வும் வந்து விழுந்தன. எங்களுக்கு எவ்வளவு தாகமாக இருந்தது என்பது எனக்கு நினைவிருக்கிறது; படைவீரர்களின் உதடுகள் காய்ந்து கரகத்து விட்டன; நான் உத்தரவுகளை ஒரு விசித்திரமான, கரகரத்த குரலில் இடும் , அளவுக்கு என் தொண்டையே அத் தனை தூரம் வறண்டு, காய்ந்து போயிருந்தது. எனக்கு முன்னால் அந்தக் குண்டு விழுத்து வெடித்த போது, நாங்கள் ஒரு பள்ளத்தின் வழியோடிக் கொண்டிருந்தோம். நான் அதனைக்

கடந்து செல்வதற்கு முன்னால், ஒரு கண நேரத்தில் கரிய

114