பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

'திேத் ேமடிப் எந்திரத் துப்பாக்கிகளாலும் எங்கள் மீது சுடத் தொடங்கினர்; அத்துடன்' ' கீழே படுங்கள்' என்று எங்களுக்கு உத்தரவிடப் பட்டது . நான் பனிப் படிவத்தின் மீது என் உடம்பை நீளக் கிடத்தினேன்; ஒரு குழந்தையைப்போல் அழுதேன். ஆனந்தத் தாலும், அதேபோல் நமது மக்களின் பால் கொண்ட பெருமித உணர்ச்சியாலும் அழுதேன். நாஜிகள் நிராயுதபாணிகளாக இருந்த எங்களை , பசியால் மயங்கிக் கிடந்த எங்களைக் கொன்று தள்ளக்கூடும்; எங்களை அவர்கள் சித்திரவதை செய்து கொல்லக் கூடும்; ஆனால் அவர்கள் எங்கள் உணர்வை உருக்குலைக்க முடியாது; அதனை அவர்களால் என்றுமே செய்யமுடியாது! மேலும், அவர்கள் எங்கள் உணர்வை உருக்குலைத்து விடமுடியும் என்று நினைப்பார்களேயானால், அவர்கள் அதுபற்றி மீண்டும் ஒரு முறை நன்கு சிந்தித்துப் பார்க்கட்டும்,

- லெப்டினென்ட் கெராசிமோவுக்குத் தலைமையகத்திலிருந்து அவசர அழைப்பு வந்து விட்டதால், நான் அவரது மீதிக் கதையையும் அன்றிரவு கேட்க முடியவில்லை. சில நாட்கள் கழித்து நாங்கள் மீண்டும் சந்தித்தோம். நிலவறையில் பூஞ்சைக் காளான் மற்றும் பைன் மரப்பிசின் ஆகியவற்றின் மணம் வீசியது. லெப்டினென்ட் கெராசிமோவ் தமது தோள்களைக் குனிந்து, தமது பெரிய, இறுகி மூடிய கைகளை முழங்கால்களின் மீது போட்டவாறு பெஞ்சின்மீது அமர்ந்திருந்தார், அவர் அவ்வாறு அமர்ந்திருந்ததை நான் பார்த்துக் கொண்டிருந்த போது, இவர் காவல் முகாமில் இருந்த காலத்தில், வாய் பேசாமல், தமது கசப்பான, பயனற்ற சிந்தனைகளிலேயே மூழ்கியலராய் மணிக்கணக்காக இப்படியே இருந்து அதற்கே பழகிப் போயிருக்க வேண்டும் என்று என்னால் எண்ணாமல் இருக்க முடியவில்லை, “ நான் எப்படித் தப்பித்து வந்தேன் என்று நீங்கள் தெரிய விரும்புகிறீர்கள். இல்லையா? அதுபற்றிக் கூறுகிறேன்” என்று அவர் என்னிடம் கூறினார்: நமது பீரங்கிப் பிரயோகத்தைக் கேட்ட, அன்றிரவுக்குப்பின் விரைவிலேயே எங்களை அரண்கள் அமைக்கும் வேலையில் ஈடுபடுத்தக் கொண்டு சென்றனர். பனி உருகும் காலம் தொடங்கிவிட்டது; மழை பெய்தது. முகாமி லிருந்து வடக்கு நோக்கி எங்களை நடத்திச் சென்றார்கள், அப்போதும் அதே மாதிரிதான் மீண்டும் நிகழ்ந்தது; அதாவது யாராவது 'களைப்பினால் மயங்கி விழுந்தால், அவரைச் சுட்டுத் தள்ளி, அவரை அங்கேயே தரையில் கிடக்குமாறு விட்டுச்

சென்றனர். ஒருவர் ஓர் உறைந்துபோன உருளைக் கிழங்கைப்

127