பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
    • நான் அன்றே, பொழுது சாய்வதற்கு முன்பே, அங்கிருந்து

ஓடிவிடத் தீர்மானித்தேன். நாங்கள் தோண்டிக் கொண்டிருந்த குழியைவிட்டு நான் மெல்ல ஊர்ந்து வெளியே . வந்தேன்; என்னிடமிருந்த மண்வெட்டியை 'எனது' இடது கையில் தூக்கிக்கொண்டு, அங்கிருந்த காவலாளியை. - - நோக்கிச் சென்றேன்; எங்கள் கோஷ்டிக்குக் காவலாக நின்றவன் அவன் ஒரு வன் மட்டும்தான்; ஏனெனில் - ஏனைய ஜெர்மானியர்கள் அனைவரும், பதுங்கு குழிகளைத் தோண்டிக் கொண்டிருந்த கைதிகளைக் கவனித்துக் கொண்டிருந்தனர்.." ":::. " பாருங்கள் என் மண்வெட்டி உடைந்து போய்விட்டது" என்று முணுமுணுத்தேன். முதல் அடியிலேயே நான் அவனைக் கீழே அடித்து வீழ்த்தத் தவறிவிட்டேனென்றால், நான் இறந்த மாதிரி தான் என்பதை உணர்ந்தேன். என் முகத்தில் தோன்றிய முகபாவத்திலிருந்து அவன் ஏதோ சந்தேகப்பட்டதாகத் தோன்றியது; ஏனெனில் அவன் தன து சிறு 'எந்திரத் துப்பாக்கியின் தோள்பட்டைப் பட்டியை உலுக்கத் தொடங் கினான். அந்தத் தருணத்தில்தான் நான் அவனை எனது மண்வெட்டியால் முகத்துக்கு நேராகத் தாக்கினேன். நான் அவனது தலையில் தாக்க முடியவில்லை; ஏனெனில் அவன் தனது தலைக் கவசத்தை அணிந்திருந்தான். என்றாலும், 'நான் கொடுத்த அடி. மிகவும் பலமாகத்தான் விழுந்தது; மறுகணமே. அவன் மூச்சுப் பேச்சற்றுச் செத்து விழுந்தான், . , << இப்போது என்னிடம் ஒரு சிறு எந்திரத் துப்பாக்கியும், மூன்று தோட்டாப் பைகளும் இருந்தன. நான் ஓடத் தொடங்கி னேன்; அப்போதுதான் என்னால் ஓட முடியாது என்பதைக் கண்டு கொண்டேன். என் உடம்பில் பலமே இல்லை; நிலைமை அப்படித்தான் இருந்தது. நான் மூச்சு வாங்கிக் கொள்வதற் காகச் சற்று நின்றேன்; பிறகு நத்தை வேகத்தில் சென்றவாறு. மீண்டும் முன்னேறினேன், பள்ளத்தாக்கின் மறுபுறத்தில் காடு அடர்த்தியாகிக் கொண்டே சென்றது; அதனை நோக்கித்தான் சென்று கொண்டிருந்தேன். நான் எத்தனை முறை கீழே விழுந்தேன், மீண்டும் எழுந்து நின்றேன், மீண்டும் விழுந்தேன் என்பதெல்லாம் எனக்கு நினைவில்லை. எனினும் அங்கிருந்து மேலும் மேலும் தொலைவில் விலகிச் சென்று கொண்டே யிருந்தேன். நான் களைப்பினால் விம்மிப் பொருமிக் கொண்டும் மூச்சுவிடத் திணறிக் கொண்டும், குன்றுக்கு மறுபக்கத்திலிருந்த காடுகளின் வழியே புகுந்து முன்னேறிக் கொண்டிருந்தபோது, எனக்குப் பின்னால் வெகு தொலைவில் சிறு எந்திரத் துப்பாக்கிக்

குண்டுகளின் சடசடவென்ற சத்தத்தையும், உரத்த 'கூச்சல்

129