உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்பதை, குறிப்பாக, கூட்டுப்பண்ணை விவசாயிகள் என்ற முறையில் ரஷ்ய விவசாயிகள் எத்தகைய வியந்து பாராட்டத் தக்க புதிய குண நலன்களைப் பெற்றுள்ளனர் என்பதை நீங்கள் தெள்ளத் தெளிவாகக் காண்பீர்கள். 1930 ஜனவரியில், டான் பிரதேசத்தில் பண்ணைத் தொழிலின் கூட்டுடைமையாக்கம் நடைபெற்று வந்த காலத்தில், குதிரைகள் இழுத்துச் செல்லும் ஒரு வழுக்கு வண்டியில், மில்ல ரோவாவிலிருந்து வெஷன்ஸ் காயா வரையிலும் நான் பயணம் செய்ய நேர்ந்தது, அந்த 168 கிலோ மீட்டர் தூரத்தையும் மிகவும் குறுகிய காலத்தில் கடந்துவிடக் கூடிய வாய்ப்புக்கள் இருப்பதாக; எனக்கோ அல்லது எனது வண்டியோட்டிக்கோ பிரமைகள் எதுவும் இருக்கவில்லை. குதிரை களும் களைத்துப் போயிருந்தன; மேலும், அந்த ரோட்டுப் பாதை மிகவும் மோச மானது, வழியெல்லாம் குண்டும் குழியும் மிக அதிகம் என்று மக்களும் கூறினர்; அத்துடன் ஸ்டெப்பி வெளியில் தரைப் பனி யும் படிந்திருந்தது; கிழக்கு வானத்தில் தென்பட்ட மங்கலான மலைத் தொடரிலிருந்து எழுந்து வந்த அடர்த்தியான செந்நீல நிற மேகங்களும் பருவ நிலை மோசமாகக் கூடும் எனப் பயமுறுத்திக் கொண்டிருந்தது. நாங்கள் பொழுது விடிந்ததும் புறப்பட்டோம், நகரை விட்டு வெளியேறியதும், புகைக் கூண்டுகளிலிருந்து சுருள் சுருளாக வெளிவரும் புகையும் மற்றும் ஆலைத் தூசியின் கார மான நெடியும் படிப்படியாக மறைந்து விட்டன; காற்றில் சுத்த மான புதிய பனியின் புத்தம் புதிய குளுமை குடி கொண்டிருந் தது; வைக்கோல் பாரம் ஏற்றிச் செல்லும் வண்டிகளிலிருந்து ரோட்டின் இருபுறமும் சிந்தியிருந்த வைக்கோலின் நறுமணமும், குதிரைகளது வியர்வையின் நெடி நாற்றமும் கலந்து வீசின. அந்த ஆழமான மாரிக்கால மோன அமைதியை, வழுக்கு வண்டிக் கட்டைகளின் கிரீச்சொலியும், குதிரைகளின் கொர கொரத்த மூச்சொலியும்தான் குலைத்தன. மேலும், அவ்வப்போது ரோட்டில் ஆழமான குழிகள் குறுக்கிடும்போது குறுக்குக் கட்டை வண்டியின் நுகக்காலின் மீது மோதும் போதும் அந்த அமைதி குலைந்தது. இளமை மிடுக்கும், குறும்புத் தனமாகச் சிமிட்டும் ஆழமாகப் பதிந்த சிறிய கண் களும், அநாயாசமாகத் தொங்கிப் புரளும் முன் தலை மயிரும், தாடியும் கொண்ட வயதான கோஸாக் ஆன எனது வண்டியோட்டி மிக மிக வாயாடியான நபர் என்று பின்னர்தான் தெரிய வந்தது. ஆரம்பத்தில் அவர் தமது

சொந்தச் சிந்தனைகளிலேயே மூழ்கியவராய், ஏதோ ஒரு சோக

144