பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

களேன்". எனக்கு அதற்கான பலமே இல்லை!' என்று வேறு வதையும் கேட்டிருக்கிறேன். மென்மையான வயிறு படைத்த ஒரு யுவதி எப்படி அந்தக் கைப்பிடியைச் சுழற்ற முடியும், நான் தான் கேட்கிறேன்! அவ்வாறு செய்தால் அவளது நரம்பே மிக எளிதாக் அறுபட்டு விட்டுப் போய் விடும். ஆடவர் களான நாம் நல்ல உறுதியான உடம்பு படைத்தவர்கள்; என்றாலும் நமக்கும் கூட, அதில் படும் சிரமத்தால் நமது முதுகு சொடுக்கு விட்டுப் போகும் ... மேலும் பெண் மக்களோ? அட, கடவுளே, பண்ணையில் ஒரு பெண் செய்ய வேண்டியிருக்கும் வேலைகளைப் .பார்க்கும் போது நமது இதயமே உடைந்து விடும். வீட்டிலும் அவள்தான். 6எல்லா வேலையையும் செய்ய வேண்டும்: சூரியன் உதயமாகும் முன்பே, சமையல் வேலையை முடிக்க வேண்டும்; பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள வேண்டும்; மற்றும் வீடு 'சம்பந்தப்பட்ட சில்லறை வேலைகள் அனைத்தையும் அவளே செய்ய வேண்டும். அத்துடன் போர் வீரனான தனது கணவனை நினைந்து எந்நேரமும் கவலைப்பட்டு நோகவும் வேண்டும். அவளுக்கு - அவளால் சமாளிக்க முடிந்த அளவுக்கும் அதிகமாக வேலையும் உள்ளது: அவளால் சிந்திக்க முடிந்த அளவுக்கும் மேலாக, தொல்லை தரும் சிந்தனைகளும் அதிகமாக உள்ளன... ஒருமுறை நான் இன்னும் பொழுது விடியாதிருந்த நேரத்தில் வயல் வழியாகப் புறப்பட்டுச் சென்றேன், அப்போது என் அண்டை வீட்டுக்காரி அங்கு தனது பசுவுக்கு வைக்கோல் வெட்டிக் கொண் டிருந்தாள், நான் அவளருகே சென்றேன் ; அவளுக்கு உதவும் நோக்கத்துடனேயே சென்றேன்; அப்போது அவள் என்னைப் பார்த்த பார்வை இருக்கிறதே, அதைக் கண்டு நான் உண்மையில் நடுங்கிப் போய் விட்டேன். வயல் முகாமுக்கு நான் வந்து சேர்ந்ததும் நான் செய்த முதல் காரியம் ஒரு சிகரெட்டைப் புகைத்துத் தள்ளியதுதான். நான் . சிகரெட் பிடிப்பதை முன்னமேயே நிறுத்தி விட்டேன். போர்முனையிலும் நான் புகை பிடித்ததில்லை. ஆனால் இப்போதோ நானே ஒரு சிகரெட்டை உருட்டித் தயார் செய்து, அதனைப் புகைத்தேன். அவள் என்னைப் பார்த்த அந்தப் பார்வை என் இதயத்திலேயே கத்திபோல் பாய்ந்து விட்டது. அவர் ஒருகணம் எதையோ சிந்தித்த வராய்த் தமது கைவிரல்களால் மேஜையில் தாளம் போட்டார்; : பின்னர் இவ்வாறு கூறினார்:

  • ' எங்களிடம் ஒரு பழைய பாட்டு உண்டு, அது உங்களுக்குத்,

தெரியுமா? பெண்கள் அதைப் பாடுகிறார்கள்:

177

171