பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/205

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நமது மத்தியில், யுத்தத்தினால் பேரிழப்புக்கு உள்ளாகாத, தமது இதயத்தில் சென்ற யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்களைத் தாங்கிக் கொண்டிராத நபர் ஒருவர்கூட இல்லை எனலாம் ..... முதலாளித்துவ வாதிகளும் அவர்களது சேவகர்களும் ஒரு புதிய யுத்தத்துக்குத் தயாராகி வருகின்றனர். அவர்கள் தமது லாபக் கொள்ளைகளுக்காக, தமது சொந்த மிருகத்தனமான நல்வாழ்வுக்காக, நமது பிள்ளைகளையும், நம்மையும் பலி கொடுக்க விரும்புகிறார்கள் .... அவர்கள் அவ்வாறு செய்ய முடியாது! தமது நேர்மையான உழைப்பைக் கொண்டு, ஓர் ஒளிமய மான வருங்காலத்துக்கான தமது உரிமையைச் சம்பாதித்து வரும் மக்கள், * * நாங்கள் சமாதானத்தை விரும்புகிறோம்!” என்று உறுதியோடு கூறுகின்றனர். இதனை அவர்கள் சமாதான மாநாடுகளில் கூறியுள்ளனர். உழைக்கும் மனிதகுலத்தின் ரத்தத்தைக் கொண்டு தமது வள வாழ்வைக் கட்டியமைக்கலாம் என்று இன்னும் நம் பிக் கொண்டிருக்கும் எல்லோருக்கும் இது ஓர் எச்சரிக்கையாக அமையட்டும். ஒரு நேர்மையான பிரிட்டிஷ் அல்லது அமெரிக்கப் போர் வீரன், எந்தவொரு நாட்டின் ராணுவச் சீருடையையும் தரித்திருக்கும் ஒரு போர்வீரன், தனக்கு ஒரே ஒரு விஷயம்- அதாவது ஓர் ஆனந்தமான ம னி த வாழ்க்கை -வாய்க்க வேண்டும் என்று விரும்பும் தன் னொத்த இன்னொரு போர் வீரனுக்கு எதிராகப் போரில் இறங்க மாட்டான். மக்களின் தீர்ப்பே தீர்ப்புக்களிலெல்லாம் மிகமிகக் கடின மான தீர்ப்பாகும் என்பதை ஒரு புதிய போரைக் கட்டவிழ்த்து விட, விரும்புவோர் நினைவில் கொள்ளட்டும்.' . நாம் வருங்காலத்தைத் தெள்ளத் தெளிவான கண்களோடு உற்று நோக்குகிறோம்; நமது வருங்காலத்தில் நாம் மிகப்பெரும் நம்பிக்கை கொண்டுள்ளோம். '. மூளை உழைப்புக்கும் உடல் உழைப்புக்கும் இடையே எந்த வேறுபாடும் இல்லாத எங்கள் நாட்டில் மக்கள் சமமானவர் களாகக் கலந்து பழகுகின்றனர். முடிவாக, நான் ஒரு சாதாரண மனிதனோடு நடத்திய ஓர் உரையாடலைப்பற்றி உங் களிடம் கூற விரும்புகிறேன்... அவர் ஒரு சாதாரண டிராக்டர் டிரைவர்; ஏராளமான வர்'. களில் அவரும் ஒருவர். அவர் போரில் கெளரவத்தோடு

போரிட்டு, அதனை பெர்லினில் முடித்துக் கொண்டார்; அவர்

181