பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காந்தி “ “ மக்களின் நாடித்துடிப்பை உள்ளுணர்வோடு தொட்டுணர்ந்தார் என்று கூறி, “ “ சுதந்திரம் அடைய இந்தியா கொண்டிருந்த உறுதிப்பாட்டின் சின்னம்”* என்ற பெருமித மிக்க புகழ்மாலையை ஜவாஹர்லால் நேரு அவருக்கு வழங்கினார் என்றால் அதில் வியப்பேதும் இல்லை. கைராட்டையின் இசை ஒவ்வோர் இந்தியரின் வீட்டிலும் ஒலிக்க வேண்டும் என்று காந்தி விரும்பினார். அவரது இந்த நிலையில், ஒவ்வொரு வருக்கும் வேலை கொடுக்கப் பாடுபட வேண்டும் என்பது ஒரு புறமிருக்க, நாட்டின் தொழில் வளர்ச்சியினது முக்கியத்துவத்தைக் குறைத்து மதிப்பிடும் ஒரு சாத்தியப்பாடும் இருந்தது. என்றாலும், லட்சோப லட்சமான கரங்களால் நெய்யப்பட்ட துணிகளை மக்கள் போதுமான அளவுக்குப் பெற்றிருந்தால், பஞ்சாலைகளின் " * ஊடுருவ வின்" உதவியோடு தமது ஆட்சியை வலுப்படுத்திக் கொள்ள முயன்ற காலனியாதிக்க வாதிகளின் முயற்சிகளுக்குப் பதிலடியாக, அவர் களுக்கு மக்கள் அதற்கு இடம் இல்லை" என்று கூற முடியும் என்று அவர் நம்பினார் என்பதையும் நாம் மறந்துவிடக் கூடாது. எனவே, அநேகமாகத் தாம் செய்தவை எல்லாவற்றிலுமே, தாம் விடாப்பிடியாகவும், தமது சொந்த வழியிலேயே, உறுதி யாகவும் காலனியாதிக்க ஆதிக்க அமைப்புக்கு எதிராக இருந்து வந்ததையும், தாம் தமது நாட்டைப் பேரார்வத்தோடு நேசித்து வந்த மனிதர் என்பதையும், அந்நாட்டின் விடுதலையும் சுதந்திரமுமே தமது வாழ்க்கை லட்சியம் என்பதையும் காந்தி புலப்படுத்தினார். ஆம். காந்தி அஹிம்சை முறைகளின் மூலம் ஓர் ** அமைதிப் புரட்சியை நிறைவேற்றி முடிக்கப் பாடுபட்டார். எங்கள் நாட்டில் நாங்களும்கூட புரட்சியை ஒரு உள் நாட்டுப் போர் இல்லாமலும், சாத்தியமான அளவுக்கு மிகக் குறைந்த இழப்புக் களோடுமே நிறைவேற்றி முடிக்க முயன்றோம், சுதந்திரத்தை ஒடுக்குவதையும், எங்களது புரட்சிச் சுடரை அணைப்பதையுமே நோக்கமாகக் கொண்டிருந்த உள் நாட்டு எதிர்ப்புரட்சிக் சக்தி களும் மற்றும் ஆயுதந்தாங்கிய தலையீட்டை மேற்கொண்ட பதினான்கு ஏகாதிபத்திய வல்லரசுகளும்தான், எங்களது புரட்சியினது வளர்ச்சியின்" சமாதான பூர்வமற்ற மார்க்கத்தை, எங்களது உழைக்கும் மக்களின் மீது நிர்ப்பந்தமாகத் திணித்தன. அவை இரு வெவ்வேறு மார்க்கங்களாகவே இருந்தன, என்றாலும் கூட, பரந்த வெகுஜனங்களின் பலத்தில் காந்தி வைத்திருந்த நம்பிக்கையை நாங்கள் பாராட்டாமல் இருக்க

முடியாது. புரட்சி என்பது எப்போதுமே மிகப் பரந்த வெகு

211