பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/261

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோன்றும் காட்டி பெற்றி விட்டு, அவரிடத்தில் தனிமனிதவாதப் போக்குகளை உருவாக்கி வளர்க்கின்றன. மேலும், இதில் அவர் ஒரு சோவியத் எழுத் தாளருக்கு எதிர் மறையாக விளங்குகிறார். ஒருவர் ஒரு சோவியத் எழுத்தாளரை சோவியத் போஷாக்குச் சாதனத்திடமிருந்து தனிமைப்படுத்திப் பார்க்க முடியாது. புரட்சிக்கு முந்திய எங்கள் எழுத்தாளர்கள் சிலரது பேராசைகள் இப்போது எங்களுக்கு மிகவும் எளிமையானவை யாகத் தோன்றுகின்றன, அதா வது கருங்கடற்கரையில் சொந்தமாக ஒரு தோட்ட வீட்டைப் பெறுவது, ஒரு சொகுசுக் காரைச் சொந்தமாகப் பெற்றிருப்பது போன்றவை..., உண்மையில் இவை யாவையும் எங்களது கனவுகள், எங்களது லட்சியங்கள் ஆகியவற்றோடு எந்தச் சம்பந்தமும் கொண்டவை யல்ல. சோவியத் எழுத்தாளருக்கும் சோவியத் பொது மக்களுக்கும் இடையே நிலவும் உறவுகளை எனது சொந்த வாழ்க்கை வரலாற்றைக் கொண்டே இனம் கண்டறியலாம்.' மேல் டான் நதிப் பிரதேசத்தைச் சேர்ந்த லெஷென்ஸ்காயா ஸ்தானித்ஸாவாசியான நான், சோவியத் ஆட்சியின் வெற்றிக் காக உள்நாட்டுப் போரில் போரிட்டேன். நான் சோவியத் ஆட்சியினாலும் போல்ஷ்விக் கட்சியினாலும் பிறந்தேன்; வளர்த்து ஆளாக்கப்பட்டேன். நான் சோவியத் மக்களின் ஒரு புதல்வன், மேலும், சோவியத் ஆட்சி என்மீது ' வாரிப் - பொழிந்த அக்கறையை, ஒரு தாய் தன் மகனின் மீது காட்டும் அன்புமிக்க அக்கறைக்கே ஒப்பிட முடியும். சோவியத் எழுத்தாளர்களது யூனியன் ஏன் 'பென் கிளப்பில் ஓர் உறுப்பினராகச் சேரவில்லை என்றும் காப்டன் ஆன்டெம் தெரிந்து கொள்ள விரும்பினார். இதற்குரிய பதில் எளிதானது. பென் கிளப்பின் உறுப்பினர்களிடையே பாசிஸ்டுகளும் உள்ளனர். பாசிஸ்டுகள் தமது சொந்த வீடுபோல் ஆட்சி செலுத்தி வரும் ஓர் இலக்கிய ஸ்தாபனத்தில் சோவியத் எழுத்தாளர்கள் சேர முடியாது, இது சம்பந்தமாக, பாசிசத்தையும் பிற்போக்குக் கும்பலையும் எதிர்த்து ஸ்பானிஷ் மக்கள் நடத்தி வரும் வீரஞ்செறிந்த போராட்டத்தின்பால் சோவியத் எழுத்தாளர்கள் கொண்டுள்ள மனப்போக்கைப் பற்றியும் நான் சில வார்த்தைகள் கூற விரும்பு கிறேன், தலையிடாமைக் கமிட்டி மேற்கொண்டுள்ள கேவலமான நிலையைக் குறித்துப் பேசவந்த காமன்ஸ் சபை உறுப்பினர்

"238

238