உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/279

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருந்த நாங்கள் அனைவருமே அந்த உயிரற்ற சலவைக் கல்லின் சில்லிட்ட. தன்மையை உணர்வது போல் அத்தனை தூரம் மனத்தில் பதிவ தாகவும் விளக்கமாகவும் இருந்தது.

    • நமது தோலுக்கடியில் ரத்தம் துடிப்பது போல்,

புத்தகத்தின் கட்டமைப்புக்குக் கீழ் எங்கே உயிர் நாடி, துடிக்கிறதோ, எந்தவொரு புத்தகத்தை நாம் என்றென்றைக் கும் இல்லாவிட்டாலும் நெடுங்காலத்துக்கு நினைவில் வைத்திருப் போமோ, எதனை என்றாவது ஒரு நாள் திரும்பவும் படித்துப் பார்க்க வேண்டுமென்று விரும்புவோமோ, அதனையே நான் நல்ல புத்தகம் என்று கூறுகிறேன். செகாவின் ஸ் டெப்பிவெளி உங்களுக்கு நினைவிருக்கிறதா?** என்று மிக்கேல் இவானோ விச் கேட்டார்; பின்னர் அவர் செகாவையும், டால்ஸ்டாயையும், கார்க்கியையும் பற்றி வியந்து பாராட்டிப் பேசத் தொடங்கி விட்டார், பின்னர் அவர் என்னிடம் டான் பிரதேசத்துக் கூட்டுப் பண்ணை விவசாயிகளின் வாழ்க்கையைப் பற்றி ஆழ்ந்த அக்கறையோடு கேட்டார்; அவர்களது வாழ்க்கையை அவர் உள்நாட்டுப் போரின் போர்முனை களுக்குச் சென்று வந்ததன் மூலம் முன்னமேயே அறிந்திருந்தார்; எனவே அவர் பழைய நினைவுகளை நினைவு கூர்ந்து இவ்வாறு கூறினார்: •் நமது நாட்டில் வேறு எங்கணும் உள்ளதைப் போலவே, நீங்களும் அங்கு நல்லவிதமான மக்களைக் கொண்டிருக்கிறீர்கள். நமது மக்களைப் போன்ற மக்கள் இருந்தால், நாம் ஒரு போரிலும் பத்திரமாகப் போர் புரிய முடியும் அல்லது நிர்மாணப் பணியையும் ஏற்று நடத்த முடியும், எனக்கு உங்கள் டான் பிரதேசத்து மாதர்களை மிகவும் பிடித்தது. அவர்கள் அத்தனை கடினமாக உழைக்கிறார்கள்; அத்துடன் அவர்கள் பண்பும் மிக்கவர்கள். அவர்கள் என்னோடு பேசிய போது, துணி கிடைக்கவில்லை, சோப்பு கிடையாது என்றெல்லாம் முறையிட்டுச் சிணுங்கவும் இல்லை; நச்சரிக்கவும் இல்லை. ஏதாவதொரு பொருளின் பற்றாக்குறை உண்மையில் அவர்களை மிகவும் பாதித்த சமயங்களில் மட்டும்தான், அவர்கள் சற்றே என்னைத் திட்டினார்கள் என்று நினைக்கிறேன். உண்மையில் அவர்கள் சரமாரியாகத் திட்டித் தீர்த்து விட்டார்கள்... இவ்வாறு கூறிவிட்டு அவர்களுக்கென்று சிரித்தார்; பின்னர் ஒரு விவசாயி யின் எல்லாமுணர்ந்த தந்திர பாவத்தோடு தமது கண்களைச் சுருக்கிப் பார்த்துவிட்டு மேலும் கூறினார்; * 'நல்லது. அழுது சிணுங்குவதையும் நச்சரிப்பதையும் காட்டிலும் நன்றாகத் திட்டித் தீர்த்து மனப்பாரத்தைக் குறைத்துக் கொள்வது நல்லது

258

256