பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/316

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நான். , வருத்தமே அடைத்தேன். நினைப்பது கூடத் * தவறாக இருக்கலாம் என்று கருதுகிறேன். என்றாலும், இதுவே ஃபிரேஸர், திரெக்கோர்னயா மானுபாக்துரா, காலிபிர், பால்பேரிங் தொழிற்சாலை , மற்றும் பிற ஆலைகளுக்கும் பொருந்துமோ என்றும் அஞ்சுகிறேன். எழுத்தாளர்கள் அவ்வப்போது பெரிய ஆலைகளில் விருந்தினர்களாக, அல்லது கெளரவ நடிகர்களாகச் சென்று காட்சியளிக்கிறார்கள் என்பதும், நமக்கெல்லாம் பெருத்த அவமானம் நேர்கிற . விதத்தில், அவர்கள் சில சமயங்களில் தாம் அங்கு சென்று காட்சியளித்தமைக்காக, தொழிலாளர் களின் பணப்பெட்டிகளிலிருந்து சற்றேனும் கூச்சமின்றிப் பணமும் பெற்று வருகிறார்கள். என்பதும் உண்மைதான். பொது நல நடவடிக்கை என்று . முதற்கொண்டு சம்பளத்தோடு கூடிய வேலை யாக மாறியது? சில எழுத்தாளர்கள் ராணுவப் பள்ளிகளுக்குச் சென்று காட்சியளிப்பதற்குக் கூடப் பணம் பெற்று வருகிறார்கள், இந்த அவமானத்துக்கு நாம் முடிவு கட்ட வேண்டிய வேளை எப்போதோ வ ந்து விட்டது. தனது குரலைக் கொண்டு தனது அன்றாட உணவைச் சம்பாதிக்கும் ஒரு கதம்ப நிகழ்ச்சிப் பாடகருக்கும், ஓர் எழுத்தாளருக்கும் இடையே ஓரளவு லித்தியாசம் உண்டு என் 4. தை அவர்களுக்கு உணர்த்து வதற்கும், இலக்கியத் தொழில் சம்பந்தப்பட்டவர்களுக்கு நேரம் வந்து விட்டது. இது கோட்பாட்டு ரீதியில் சாதிக்க முடியாததாகும்; அதிலும் ஒரு கம்யூனிஸ்டு எழுத்தாளரின் கரம், ஒரு தொழிற்சாலை அல்லது வேறு எந்தவொரு தொழில் நிறுவனத்திடமிருந்தாவது சன்மானம் பெறுவதற்கு நீள்கிறது என்றால், அது இன்னும்கூடச் சகிக்க முடியாததாகும், பின் ஏன் 1,200 எழுத்தாளர் கள் மாஸ்கோவில் வசிக்க வேண்டும்? டிராக்டர்களும் கூட அவர்களை வெளியே இழுத்துப் போட முடியாதவாறு, அவர்கள் ஏன் அத்தனை உறுதியாக மாஸ்கோவைப் பற்றிப் பிடித்துக் கொண்டு வாழ வேண்டும்? இந்தக் கேள்விகளுக்குப் பதிலளிப்பது எனக்குச் சிரமமாகத் தோன்றுகிறது. ஒருவேளை இந்தப் புதிருக்கு நீங்களே விடை கண்டுபிடிக்க முயல்வீர்களோ, என்னவோ? எனக்கு ஒன்று மட்டும் தெரியும், படைப்பாக்கச் சக்திகளின் இத்தகைய வினியோகமானது தவறானது; நியாயமற்றதும் கூட, அந்தோ ! லெனின்கிராடு, சீவ், மின்ஸ்க், அல்மா-அதா மற்றும் எல்லாம் பெரிய நகரங்களிலும்கூட இதே நிலைமைதான். எங்கு பார்த்தாலும் எழுத்தாளர்கள் நகரங்களில்தான் வசிக்கிறார்கள்; "ஒரு தொழிலாளர் குடியிருப்பிலோ அல்லது ஒரு கிராமத்திலேr

நிறுவனத்தாழிற்சாலை இரு கம்யூனில்

291