பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாம் அனைவரும், காணத் தவறிவிட்டது எப்படி? என்பதுதான் ! நமது 'கூட்டுப்பண்ணைத் தலைவர்களும், எந்திர மற்றும் டிராக்டர் நிலையங்களின். டைரக்டர்களுமான சிலர் கட்சியினால் கிராமப் புறத்துக்கு " அனுப்பி வைக்கப்பட்ட முப்பதாயிரம் பேர்களில், சிலர்-தாம். முன்னர் வேலை பார்த்து வந்த நகரங்களிலுள்ள தமது பழைய வீடுகளிலேயே வசித்துக் கொண்டும் - கூட்டுப் பண்ணைக்கும் அல்லது எந்திர மற்றும் டிராக்டர். 'நிலையத்துக்கும் எப்போதாவது சென்று தலைகாட்டிவிட்டு வரவும் முயன்றபோது , என்ன. நிகழ்ந்தது என்பதை நினைத்துப் பாருங்கள், இதற்காக நாடு தழுவிய அளவில் ஒரு முழுமையான இயக்கமே நடத்தப் பட்டது! பிராவ்தா இதனைக் குறித்துத் திரும்பத் திரும்ப எழுதியது; பத்திரிகைகள் அனைத்துமே உஷார்ப்படுத்தப்பட்டன. தாம் நிர்வகித்து வரும் நிறுவனத்திலிருந்து விலகி வாழ்ந்துவர விரும்பிய இந்த நபர்களைப் பொதுஜன அட்சிப் பிராயம் கடுமை யாகக் கண்டித்தது. ஆனால் இப்போதோ நமது எழுத்தாளர்கள் தமது இலக்கிய மூலாதாரங்களிலிருந்து பல்லாண்டுக் கணக்கில் விலகி வாழ்ந்து வருகின்றனர்; ஆயினும், இதெல்லாம் முற்றிலும் சரியானதுதான் என்பது போல், ஒரு போராளிக்கு இரண்டாவது அணி வரிசை ஒரு - தாற்காலிகமான இடமாக இல்லாமல், அதுவே ஒரு சாஸ்வதமான வாசஸ்தலமாகக் கருதப்பட்டு விட்டது போல் , இந்த நிலைமையைக் குறித்து அந்த எழுத்தாளர்களிடம் எவரும் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லையே, : . : . " :... - - எழுத்தாளர் யூனியனின் பணி முழுவதையுமே உறுதியோடு புன்ர்.மைத்தாக வேண்டும். கார்க்கி இறந்து போனதற்குப் பின்னால், எழுத்தாளர் களில் , எவரொருவரும் அவருக்குச் சரிநிகராக - வளர்ந்தோங்கவில்லை என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரியவில்லையா? தொழிலாளி வர்க்கத்தின் உள்ளத்தில், நமது நாட்டிலும், அதன் எல்லைகளுக்கு மிகவும் அப்பாலும் உள்ள உழைக்கும் மக்களின் உள்ளத்தில், அவர் உத்வேகங்கொண்டு எழச் செய்த அந்த எல்லையற்ற அன் பின் விஷயத்தில், தமது வாழ்க்கையினாலும் தமது எழுத்துக்களாலும் அவர் தகுதியோடு சம்பாதித்திருந்த அந்த அன்பு விஷயத்தில், கார்க்கிக்கு இணையாக நம்மில் எவருமே என்றுமே இருந்தது மில்லை; என்றும் இருப்பது சாத்தியமாகவும் தோன்றவில்லை, - கார்க்கியின் மரணத்துக்குப் பின்னர் நாம் என்ன செய்யத் தீர்மானித்தோம்? நாம் தோழர் ஃபதயேவைத் தலைவராகக் கொண்டு - எழுத்தாளர் யூனியனில் ஒரு கூட்டுத் தலைமையை நிறுவத் தீர்மானித்தோம்; ஆனால் இதனால் விளைந்த பயன் ஏதுமில்லை. இதற்கிடையில் நமது யூனியன் படைப்பாக்க'

295'

295