பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/386

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன நிறைவு பெறுகிறேன். நா.வல்' என்ற இலக்கிய வடிவம் காலாவதியாகி விட்டது, தற்காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய இனியும் அதனால் இயலாது எனக் கூறப்படும். கூற்றுக்களை அண்மைக் காலமாக நான் அடிக்கடி படித்தும் : கேட்டும் வந்துள்ளேன். பட்டவர்த்தனமா கச் சொன் னால் இவை என்னைத் திகைக்கவே வைத்தன. எனினும் உண்மையில் நாவல்தான் ஒரு நூலாசிரியருக்கு, எதார்த்த உலகின் மிகவும் முழுமையான சித்திரத்தை வழங்குவதற்கும், இந்த எதார்த்தத்தின்பாலும் அதன் அதியவசரமான பிரச்சினைகளின்பா லும், தமது சொந்தக் கண்ணோட்டத்தையும், அதேபோல் தம்மையொத்த கருத்துக் . கொண்ட மக்களின் கண்ணோட்டத்தையும் அவர் செலுத்திப் பார்ப்பதற்கும் இடமளிக்கிறது. வேறு எந்தவோர் இலக்கிய வகையைக் காட்டிலும் நாவல் தான், ஒரு நூலாசிரியருக்கு, பிரபஞ்சத்தின் மையக் கேந்திர மாகத் தமது சிறிய சொந்த வாழ்க்கையையே எடுத்துக்காட்ட முயலும் முயற்சியில் ஈடுபடாதவாறு, நம்மைச் சுற்றியுள்ள வாழ்க்கையின் பரந்துபட்ட தன்மையைக் கூர்ந்து கண்டறிய இடமளிக்கிறது, இந்த இலக்கிய வகை அதன் இயல்பினாலேயே எதார்த்த எழுத்தாளருக்குச் செயல்முறைக்கான மிகப்பரந்த வாய்ப்பை அளிக்கிறது. கலையுலகில் பல தற்காலப் போக்குகள் எதார்த்த வாதத்தை மறுத்தொதுக்கின்றன ; ஏனெனில் அது காலங்கடந்த பத்தாம் பசலியாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆனால் நானோ, பழமை வாதி எனக் குற்றம் சாட்டப்பட்டு விடுவோமோ என்ற பயமே இல்லாமல் இதற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களையே கொண்டிருக்கிறேன் என்பதையும், நான் எதார்த்தவாதக் கலையைத் தேர்ந்து தெளிந்து திடமாக ஆதரித்து நிற்பவன் என்பதையும் அறிவிக்கிறேன். புதுமை இலக்கியத்தைப்பற்றி எவ்வளவோ பேசப்படுகிறது; இது விஷயத்தில் அவர்கள் மனத்தில் கொண்டிருப்பதெல்லாம் பிரதானமாக வடிவத்துறையில் மேற்கொள்ளப்படும் சோதனை முயற்சிகளைத்தான். எனது அபிப்பிராயத்தில், இலக்கியத்தில் புதுமை இலக்கிய கர்த்தாக்கள் என்பவர்கள், நமது சகாப் தத்தின் வாழ்க்கைக்கே உரிய புதிய அம்சங்களையும், உறவுகளையும் மனப்போக்குகளையும் தமது புத்தகங்களின் மூலம் புலப்படுத்தி வரும் எழுத்தாளர்களேயாவர். எதார்த்தவாதமும் சரி, எதார்த்த வாத நாவலும் சரி, கடந்த காலத்திய மாபெரும் விற்பன்னர்களின் அனுபவத்தையே சார்ந்திருக்கின்றன. ஆயினும் அது தனது வளர்ச்சிப் போக்கின்

  • 343