பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/395

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆண்டுகளுக்கு முன் இருந்ததைப் போலவே, இன்றும் அதியவசர உமா ன கேள்வியாக ஒலிக்கிறது. சோவியத் நூலாசிரியர்கள், மற்றும் பிற நாடுகளிலுள்ள முற்போக்கு எழுத்தாளர்கள் ஆகியோரில் மிகப் பெரும்பாலோர் தமது புத்தகங் களில் இந்தக் கேள்விக்கு ஒரு தெள்ளத் தெளிவான பதிலை வழங்குகின்றனர். 'சமுதா . வாழ்வில் எழுத்தாளனின் பாத்திரம் என்ன என்பதைப்பற்றி, பிரதிநிதித்துவம் வாய்ந்த பெரும் கூட்டங் களில் எழுத்தாளர்களோடும் பத்திரிகையாளர்களோடும் பத்திரிகை நிருபர்க ளோடும் விவாதிக்கும் சந்தர்ப்பம் எனக்குப் பல முறை கிட்டியுள்ளது. குறிப்பாக, சென்ற ஆண்டில் நோபெல் பரிசு வழங்கும் விழாவின்போது ஸ்டாக் ஹோம் டவுன் ஹாலில் நான் ஆற்றிய உரையில், இந்த விஷயம் ஒரு முக்கியப் பகுதியாக விளங்கியது, எ ன த பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த சபை யோர், இப்போதைய சபையோரிடமிருந்து அடிப்படையிலேயே 4. மாறுபட்டவர்களா கவே இருந்தனர். எனவே நான் எனது கருத்துக்களைப் பொதிந்து தெரிவிக்கப் பயன்படுத்திய உருவமும் அதற்கேற்ப மாறுபட்டதாகவே இருந்தது. நினைவிருக்கட்டும். உருவம் தான் மா றியது; உள்ளடக்கம் அல்ல. கம்யூனிஸ்டுகள் எங்கெங்கே, என்னென்ன மொழியில் பேசினாலும், நாம் எப்போதும் கம்யூனிஸ்டுகள் என்ற முறை யிலேயே பேசுகிறோம், இது சிலருக்குப் பிடிக்காமல் இருக்கலாம்; என்றாலும் அவர்கள் இதனைச் சகித்து விழுங்கிக் கொள்ளத்தான் வேண்டும். மேலும் இதே குண நலன்தான் எங்கணும் மதிக் க வும் படுகிறது. ஒரு சோவியத் பிரஜை எங்கே ஒரு மேடைச் சொற்பொழிவை ஆற்றினாலும், அவர் ஒரு சே!! வியத் தேச பக்தர் என்ற முறையிலேயே உரையாற்ற வேண்டும். சமுதாய வாழ்வில் எ ழு த் த ா ள னி ன் பாத்திரத்தை விளக்கிக் கூறும்போது, நாம் கம்யூனிஸ்டுகளாகவே, நமது மாபெரும் தாயகத்தின் புதல்வர்களாகவே, கம்யூனிச ச தாபத்தைக் கட்டியமைத்து வரும் ஒரு நாட்டின் பிரஜை களாகவே, நமது கட்சியின், மற்றும் நமது மக்களின் புரட்சிகர- மனிதாபிமானக் கருத்துக்களின் பிரதிநிதிகளாகவேதான் பேசுகிறோம். ஒரு நூலாசிரியர் சோவியத் யூனியனில் ஒன்றை எழுதுகிறார், வெளிநாட்டில் வேறொன்றை வெளியிடுகிறார் என்றால், அது மிகவும் வேறுபட்ட விஷயமாகும். அவர் இரண்டு சந்தர்ப்பங்: களிலும் ஒரே ரஷ்ய மொழியைத்தான் பயன்படுத்துகிறார்; அனால் முதல் சந்தர்ப்பத்தில் தம்மைச் சாமர்த்தியமாக மூடி மறைத்துக் கொள்வதற்கு அதனைப் பயன்படுத்துகிறார்: இரண்டா - 3 52