பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/437

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"குழந்தையை, இருட்டில் ஒரு குறுகிய இடுக்கின் வழியா கப் பளிச்சிட்டுப் பாய்ந்து வரும் ஞானத்தின் ஒளி, திடுக்கிட வைத்து விடுகிறது. அன்பார்ந்த சிறுவர் சிறுமியரே, உங்களைப் பொறுத்தவரையில், இது மிகவும் அண்மைக் காலத்திய கட்டம் இல்லையென்றாலும், இது கடந்துபோன காலகட்டமேயாகும். இப்போது நீங்கள் உங்கள் முன் காண்பது ஒரு குறுகிய இடுக்கின் வழியாகப் பாய்ந்து வரும் ஒளிக்கதிர் அல்ல; மாறாக, கண்ணைப் பறிக்கும் பிரகாசமிக்க உலகுக்குள், கம்யூனிசத்தின் அற்புதமான கருத்துக்களினால் வழி நடத்தப் பெற்று நீங்களே கட்டியமைக்கப் போகும் வாழ்க்கைக்குள், அதன் நியதிகளிலும் நீங்களே திறமை பெற்று அவற்றை ஆளவேண்டும் என்று உங்களிடம் கோரப்படும் ஒரு வாழ்க்கைக்குள் புகுவதற்காக விசாலமாகத் திறந்து விடப்பட்ட வாசலையே நீங்கள் காண்கிறீர்கள், 'விதிவிலக்கின்றி உங்கள் எல்லோருக்கும், ஒளியும் ஞானமும் மிக்க இந்த உலகுக்குள் புகுவதற்கான இந்தக் கதவுகளை விசால மாகத் திறந்து விடுவதற்காக, இந்தக் கதவுகளை என்றென்றைக் கும் திறந்த நிலையிலேயே வைத்திருப்பதாக, உங்களது மூதாதையரும், உங்களது . பாட்டனார்களும், தந்தையரும், தமையர்களும் ஒரு வீரமிக்க போராட்டத்தை நடத்த வேண்டி யிருந்தது என்பதையும், அந்தப் போரில் எவ்வளவோ பலத்தைச் செலவிட வேண்டியிருந்தது என்பதையும், அவர்கள் தமது ரத்தத்தை எவ்வளவோ சிந்த வேண்டியிருந்தது என்பதையும், என்றுமே மறந்து விடாதீர்கள். - நீங்கள் அந்த ஒளியை நோக்கித் துணிவோடு வீறு நடை, போட்டுச் செல்லவும், புத்தகங்களை உங்கள் இதயமெல்லா வற்றையும் கொண்டு நேசிக்கவும் வேண்டும். புத்தகம் வெறுமனே உங்களது தலைசிறந்த நண்பன் மட்டும் அல்ல; அது வாழ்க்கையில் உங்களது விசுவாசமிக்க துணைவனும் ஆகும். - 1952 , . ', கஜாக் எழுத்தாளர்களின் மூன்றாவது காங்கிரசில் ஆற்றிய உரையிலிருந்து ........ நாம் இருபது அல்லது முப்பது ஆண்டுகளுக்கு முன்னால் எழுதி வந்ததைக் காட்டிலும் இப்போது மிகவும் சிறப்பாக எழுதியாக வேண்டும் - என்பது சொல்லாமலே விளங்கும். அளவிடற்கரிய விதத்தில் வளர்ந்தோங்கியுள்ள நமது வாசகர் களின் கலாசாரத் தேவைகள் நம்மிடம் இதனைக் கோருகின்றன. மேலும், இன்றைய நிலைமைகளில் நட்புறவான விமர்சனமும் - 387