பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/440

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பறப்பதற்கு அவை பயந்தாலோ, அவற்றின் சிறகுகளை முறித்துப் போட்டு விடுவதில்லை. அதேபோல் அரும்பிவரும் எழுத்தாளர் களின் இறக்கைகளை முறித்துப் போடவும் நமது விமர்சகர் களுக்கு உரிமை கிடையாது. ஆயினும், துர்ப்பாக்கிய வசமாக, அத்தகைய காரியங்களும் நிகழத்தான் செய்கின்றன, அத்து: மீறிய ஆர்வ மிக்க விமர்சகர் ஒருவர், கனத்த தடிக்கம்பினால் ஓர் இளம் எழுத்தாளரின் தலை மீது பலமாக அடித்து, அவரிடம் கொஞ்ச நஞ்சம் இருந்த நம்பிக்கையையும் கு டியோடிப் போகச் செய்து விடுவார்; இதன் பின் அந்தக் கழுகுக் குஞ்சு மீண்டும் சிறகை விரித்துப் பறக்கத் துணியுமா என்பது எவருக்குமே தெரியாது. ஓர் இளம் எழுத்தாளருக்கு நல்ல சன்மானம் வழங்கி னால், அது தவிர்க்கொணாத விதத்தில் அவருக்குத் தலைக்கனம் அதிகரிக்கவும், அவரது படைப்பாக்க வலியை குன்றிப் போக வும் தான் வழி வகுக்கும் என்று சிலர் அஞ்சும் அச்சத்தை நான் கொண்டிருக்கவில்லை, ஆரோக்கியமான நல்லொழுக்கக் கோட் பாடுகளைக் கொண்டுள்ள ஒரு மனிதர், அவர் எவ்வளவுதான் ' பிரபலமும் புகழும் பெற்றாலும் கூட, அவரது இளமை வயதிலும் சரி அல்லது முதிய வயதிலும் சரி, தலைக்கனத்துக்கு இரையாகி விட மாட்டார். அதே சமயம் தமது உள்ளத்தில் ஓரளவிற்குச் சீர்கெட்ட தன்மையைக் கொண்டிருக்கும் ஒரு நபரோ, தாம் இன்னும் தொட்டிலிலேயே கிடந்து வரும் நிலைமையிலும் கூட, தற்பெருமை கொண்டவராக வளரத் தொடங்கி விடுவார்.... வாழ்க்கையிலும் இதே போல் நிகழ்வதுண்டு: ஓர் இளம் எழுத்தாளர் சுமாரான புத்தகம் ஒன்றை எழுதுகிறார்; உதாரண மாக மூன்றாண்டுக்கால் உழைப்பின் பலனாய், தாம் உருவாக்கிய இந்தப் புத்தகத்துக்கு அவர் ஓர் அற்பமான சன்மானத்தைப் பெறுகிறார். இந்தப் புத்த கம் ஓர் இரண்டாம் பதிப்புக்குக் கூடத் தகுதி பெறுவதில்லை; இதனால் அந்த எழுத்தாளர் தமது தவ று களைத் திருத்திக் கொள்ளும் முழுநேர வேலையிலும் தம்மை ஈடுப் படுத்திக்கொள்ள முடியாது; ஒரு புதிய புத்தகத்தை அவர் எழுத முற்படுவது என்பதோ அதைக் காட்டிலும் அசாத்தியம். ஏனெ னில் அவருக்கிருந்து வந்த கடன்களையெல்லாம் தீர்த்து முடிந்த பின் கலர், அவரிடம் மிஞ்சியிருக்கக் கூடியதெல்லாம், தம்மிடமுள்ள கடைசிக் கால்சராயையும் இழந்து விட நேரும் பரிதாபத்திலிருந்து தம்மை அவர் காப்பாற்றிக் கொள்ளும் அளவில் தான் இருக்கும். எனவே அவர் இலக்கிய உலகிலிருந்து வி லதிக் சொள். கிறார்; ஒரு வேளை அவர் என்றுமே அதற்குத் திரும்பி வராமலும் போகலாம்... 39.0