உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/454

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சாதனைகளிலும் சரி, ஆயுதம் தாங்கிப் போராடும் சாதனை களிலும் சரி, மிகவும் மகத்தான வர்களான நமது மக்களின் ஒரு கோடிப் பேரைக் கொண்ட கம்யூனிஸ்டு முன்ன ணிப் படையே வருங்காலத்துக்குள் செல்லும் தடத்தை வகுத்துச் செல்கிறது. - எகிப்திய நாட்டுப் பிரமிடுகள், மற்றும் ஏனைய தொன்மை வாய்ந்த நினைவுச் சின்னங்கள் ஆகியவை - எல்லாம், மனிதகுல வரலாற்றில் தம்மைப் பற்றிய ஒரு நினைவை விட்டுச் செல்ல, மக்கள் மேற்கொண்ட பரிதாபகரமான முயற்சிகளைத் தவிர வேறு என்ன? இந்த நினைவுச் சின்னங்கள் யாவும் காலத்தால் மறைந்து விடும்; ஏனெனில் அவை இடிந்து சிதைந்து பபண்ணோடு மண்ணாகப் போகக் கூடியவையே. ஆனால் கம்யூனிசமேr உண்மையில் காலமும் இயற்கைச் சக்திகளும் ஊடுருவ முடியாத தோர் நினைவுச் சின்னமாசு, லெனினது புனிதத் திரு நாமத்தைப் போன்ற அமரத்துவத்தோடு என்றென்றும் சிரஞ்சீவியாக நின்று இலங்கும், கம்யூனிச சமுதாயத்தைக் கட்டியமைக்கும் நிர்மாணிகள் யாவருக்கும் கீர்த்தி உண்டாகட்டும்! என்றுமே தயக்கமோ மாய்மாலமோ இல்லாமல், தமது சொல்லாலும் செயலாலும், நமக்கு-நமது முன்னணிப் படைத் தலைமைக்கும் படை வரிசைகளுக்கும்-உதவி வரும் நமது அயல் நாட்டுச் சோதரர்களுக்கும், நண்பர்களுக்கும், தோழர்களுக்கும் கீர்த்தி உண்டாகட்டும்! நமது கட்சியைப் பற்றி, கட்சி நண்பர்களையும் தோழர் களையும் பற்றி நான் நினைத்துப் பார்க்கும்போது, கோகோலின் அந்த மற்க்கொணாத வாசகங்களே நினைவுக்கு வருகின்றன, தாராஸ் 4-ல்பா *வில், துப்னோவுக்குச் செல்லும் வழிகளில் போர் தொடங்கும் தருணத்துக்கு முன் னால், கிழவர் தாராஸ், ஜபரோழ்விக் கோ ஸாக்குகளிடம் பேசும் பேச்சின் வாசகம் உங்களுக்கு நினைவு வருகிறதா? அவர் அவர்களிடம் இவ்வாறு கூறுகிறார்; * * தோழமையைக் காட்டிலும் மிகவும் புனிதமான பந்தங்கள் வேறு எதுவும் கிடையாது. ஒரு தந்தை தமது குழந்தையை நேசிக்கிறார்; ஒரு தாய் தன் குழந்தையை நேசிக் கிறாள்; குழந்தை தன் தந்தையையும் தாயையும் நேசிக்கிறது. ஆனால், அது வல்ல முக்கியம், சோதரர்களே! ஒரு மிருகமும் கூட்டத்தான் தனது குட்டிகளை நேசிக் கிறது. ஆனால் மனிதப் பிறவிகள் மட்டுமே ரத்த பந்தத்தினால் அல்லாமல், உணர்வின் பந்தத்தினால் உறவு பூண முடியும்.

  • இந்த நாவல் இதே தலைப்பில். தமிழில் வெளிவந்துள்ளது. வெளியீடு:

ஸ்டார் பிரசுரம், தமிழாக்கம்: ரங்க துரைவேலன். 404