பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/463

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முற்காலத்தில் விவசாயிகள் விதைப்புக்கு முன்னால் விதைத் தானியங் களைச் சலித்து எடுக்கும்போது, அவற்றைக் கயிறுகளில் கட்டித் தொங்கவிடப்பட்ட ஒரு பெரிய சல்லடையின் வழியாகச் சலித்து எடுப்பதை உங்களிற் பலர் . பார்த்திருக்கக் கூடும், இதனால் தூசியும் பதரும் காற்றோடு பறந்து போய்விடும்; நல்ல கனமான விதைகள் மட்டுமே சல்லடையில் தங்கி நிற்கும் இலக்கியத்திலும் இப்படித்தான்: பதர் கள் காற்றோடு பறந்து போய்விடும்; விதைகள் மட்டுமே தங்கி நிற்கும். இந்தச் சல்லடையை வாழ்க்கையேதான் சுழற்றி வருகிறது. சுத்தப் படுத்தும் அத்தியாவசியமான நிகழ்ச்சிப் போக்கு தானே நிகழ்ந்து தீரும். இளம். எழுத்தாளர்கள் விஷயத்தில் நிலைமைகள் இவ்வாறு தான் உள்ளன", மூத்த எழுத்தாளர்கள் விஷயத்திலும் நிலைமை ஒன்றும் மேம்பட்டதாக இருந்து விடவில்லை. நகரத்தில் வாழும் மனிதரான ஒருவரை, அவருக்கு மிக மிகப் பயங்கரமாகத் தோற்றும் நாட்டுப்புறத்தில், அவரது முதிய வயதில் சென்று குடியேறுமாறு தூண்டுவதற்கு எப்படி முடியும்? மேலும், அவர் அங்கு சென்றாலும், அவர் யாருக்குத்தான் அங்கு நல்ல விதத்தில் பயன்பட முடியும்? எழுத்தாளர்கள் தாம் எந்த மக்களைப்பற்றி எழுதுகிறார்களோ, அந்த மக்களுக்கு மிகவும் நெருக்கமாகச் சென்று அவர்களை வாழச் செய்ய வேண்டும் என்ற நம்பிக் கையை, என்னைப் பொறுத்தவரையில், நான் நெடு நாட்களுக்கு முன்பே கைவிட்டுவிட்டேன், நம்பிக்கைக்கே இடமில்லாத விவகாரம் அது. . - எழுத்தாளர்களான நாமும் கலைத்துறையில் ஈடுபட்டுள்ள நபர்களும் அன்பும் விவேகமும் மிக்க ஆலோசகர்களாக மக்களுக்குத் தொடர்ந்து பணியாற்றி வருவோம் என்ற நம்பிக்கை இங்கு இந்தக் காங்கிரசில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆயினும், வாழ்க்கையைத் தெரிந்து கொள்ளாத ஒரு நபர் ஒரு நல்ல ஆலோசகராக விளங்குவ து அரிதினும் அரிதாகும். தமது ஆலோசனையால் அவர் நம்மைச் சிக்கச் செய்துவிடும் குழப்பத்தி லிருந்து, நாம் என்றுமே மீண்டு வர முடியாது . . ,உண்மையில், ஓர் எழுத்தாளர்-கடைசியாக முப்பது அல்லது நாற்பது ஆண்டு களுக்கு முன்பே கிராமத்தைக் கண்ணால் பார்த்திருந்த ஒரு நபர் அதனோடு முற்றிலும் தொடர்பற்றுப் போய்விட்ட அந்த நபர்,- சிலர் அத்தகைய தொடர்பை என்றுமே கொண் 44-ருந்ததும் இல்லை என்பதும் உண்மை -அவர் எப்படி, தனது தொழிலை அத்துபடியாக அறிந்துள்ள ஓர் அனுபவமிக்க கூட்டுப் பண்ணைத் தலைவருக்கோ அல்லது அரசாங்கப் பண்ணையின் டைரக்டருக்கோ, உற்பத்தி