பக்கம்:இதயத்தின் கட்டளை.pdf/465

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உழைக்கும் மக்களைப்பற்றி எழுதக் கூடாது என்று எனக்குக் கேட்கத் தோன்றுகிறது. போல்தாவா பிராந்தியத் தி லிருந்து நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால் போல் தாவா வாசி களைப் பற்றி எழுதுங்கள்; செர்னிகோவ் .பிராந்தியத்திலிருந்து, தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தால், செர்னிகோவ் வாசிகளைப் பற்றி எழுதுங்கள்! ஆனால் அந்தோ , அவர் அவ்வாறு கூறவில்லை. மேலும் இப்போதோ அந்த எழுத்தாளர்கள் மீண்டும் தலைநகர மான கீவ் நகருக்கே திரும்பவும் போய்ச் சேர்லரார்கள்: நிலைமை கள் யாவும் முன்னிருந்ததைப் போலவே தொடர்ந்து இருந்து வரும். எழுத்தாளர்கள் மிகவும் மலிந்திருக்கும் ஏனைய பிராந் தியங்களின் செயலாளர்களிடமும் இதே கோரிக்கையை விடுக்க முடியும். அந்தச் செயலாளர்கள் அந்த எழுத்தாளர்களோடு பேசி அவர்களைச் சரிக்கட்டி, அவர்களைத் தமது அத்தனை அமைதியில் , லாத நாட்டுப்புற நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் அழைத்துச் சென்று, அங்கு அவர்களைத் தூங்கி வழியாத ஒரு போர்க்குணம் மிக்க வாழ்க்கையை வாழச் செய்திருக்க வேண்டும்;. அவ்வாறு செய்தால், அது அவர்களுக்கு வாழ்க்கையைப் பற்றிய ஆழமான விஷய ஞானத்தை வழங்கி, உண்மையான படைப்பாக்க முயற்சியில் ஈடுபடுமாறு அவர்களுக்கு உத்வேகம் ஊட்டும். இப்போதும் கூட இந்த விஷயத்துக்குப் பரிகாரம் காண முடியும் என்றே நான் கருதுகிறேன். நமது இலக்கியம் முன்னணியில் நிற்கும் ஓர் இலக்கியமாகும்; அதன் சித்தாந்த உள்ளடக்கம் மட்டுமே இதற்குக் காரணம் அல்ல. வெளி நாடுகளிலுள்ள பதிப்பகத்தாரோடு நமக்குள்ள தொடர்புகள் விரிவடைந்து வருகின்றன. நமது புத்தகங்கள் எங்கணும் வெளியிடப்படுகின்றன, அயல் நாடுகளில் நமது வாழ்க்கையை, நமது இன்றைய எதார்த்தத்தைத் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வம் மிகவும் ஆழமாக இருப் - பதால், வடிவத்தைக் காட்டிலும் உள்ளடக்க விஷயம்தான் அந்த வாசகர்களைப் பெரிதும் கவர்கின்றது. ஆயினும், சோவியத் எழுத்தாளர்களான நாம் நமது சொந்த விமர்சகர்களுக்கு எதிராகக் கொண்டுள்ள குற்றச் சாட்டுக்களைக் காட்டிலும், அயல்நாட்டு. விமர்சகர்களுக்கு எதிராகவே அதிகமான குற்றச்சாட்டுக்களைக் கொண்டிருக் கிறோம். நமது விமர்சகர்களிற் பெரும்பாலோர் வாழ்க்கையைப் பற்றிய விஷய ஞானத்தையே ' பெற்றிருக்கவில்லை என்றால், அயல் நாட்டு விமர்சகர்களோ-விஷய ஞானம் இருக்கட்டும்- அதனைப் பற்றிய எந்தவிதமான, ஊகமான கருத்தையும் கூடத், ', கொண்டிருக்கவில்லை. பல சமயங்களில் அவர்கள் நம்மைப் .. பற்றிக் கூறும் குற்றச் சாட்டுக்கள் முற்றிலும் விவேகமற்றவை ,