பக்கம்:இதழியல் கலை அன்றும் இன்றும்.pdf/348

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

346

எழுத்துரிமை, பேச்சுரிமைகளைக் காக்க கட்சிப்பத்திரிகைகள் நடத்துவது எப்படி?


அடுத்தப் பத்திரிகை எழுத்தாளர் மீண்டும் தாக்கி எழுத அஞ்சுவார். அது மட்டுமன்று; இத்தகைய எழுத்துக்கள், பத்திரிகையைச் சார்ந்திருக்கும் கட்சிக்காரர்களை வீரர்களாக்கும். மற்றக் கட்சிக்காரர்கள் தாக்கிக் கைப்பற்ற முடியாத கொள்கை உறுதி கொண்ட வீரர்களாக அவர்கள் உலா வருவார்கள். அதாவது, ஆழ்ந்த கட்சிச் சிந்தனைகளை, உலக அறிவுச் சிந்தனைகளை எழுத்து மூலம் தெரிவிக்கும் முறையை Lucubrate என்பர். அந்தப் பணியைக் கட்டுரையாளர் செய்வது நல்லது.

ஆனால், அக்கட்டுரை எழுத்துக்கள், கருத்துக்கள், கேலிக்கும், முட்டாள்தனத்துக்கும் (Ludicrous) சான்றாகிவிடக் கூடாது.

கட்சிக்காரர்கள் அனைவரையும் அக்கட்சியின் இலட்சியத்திற்கான விடி வெள்ளியாக Luciferத் திகழ்ந்தால் அந்தப் பத்திரிகை மக்களிடையே கொள்கை மலராகப் பூத்து மணந்து கொண்டே தேன் பிலிற்றும்.

பல் சுவைகளை
வழங்க வேண்டும்

கட்சிப் பத்திரிகை நாளேடாக இருந்தால் தொடர் கதை எழுதச் சொல்லலாம். ஆனால், அந்தக் கதை ஆற்றொழுக்கான தொடர்பாக எழுதப்பட்டிருக்கின்றதா என்று படித்துப் பார்ப்பது ஆசிரியர் கடமைகளில் ஒன்று.

அவ்வாறு எழுதப்படும் கதையில் முழுநிலைப் பின்னணி விளக்கம்; சென்ற காலக் கதைச் சுருக்கம்; ‘சங்கொலி’ பத்திரிகையில் வெளி வந்த ‘வைகோ’ நடைப் பயணச் செய்திக் கட்டுரைகள் போல, மற்றும் துணுக்குரைகள், கேள்வி-பதில், சிற்றிலக்கியச் சிறுகதைகள், கவிதை மலர் பூக்காடுகள் அழகு, விந்தைகள் புரியும் விஞ்ஞானக் கூறுகள்; வரலாற்று ஓவிய நினைவுகள், பேரிலக்கியச் சிறுகதைகள்; புத்தக விமர்சனங்கள்; நாடகம், சினிமா, இசை, ஆடல் பாடல்களது கலை விமர்சனங்கள், இறுதியாக வீர விளையாட்டுப் போட்டி விந்தைகள், இளம் கவிஞர்கள் தலைமுறைகளை வளர்க்கும் கவிதைச் சோலை போன்ற பகுதிகளைத் தக்க வல்லவர்களைக் கொண்டு