பக்கம்:இதுதான் திராவிடநாடு.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

இதுதான் திராவிடநாடு

ஆபிரிகா,ஆஸ்திரேலியா ஆகிய கண்டங்களே உருவாவதற்குமுன், மனிதனும் மனித நாகரிகமும் முதலில் பிறந்த கன்னி மாநிலம் இது ! இயற்கையின் முதல் நிலவுலகக் குழந்தை, உலகுடன் பிறந்து உலகுடன் வாழும் நிலவுலகமையம், நாகரிகத்தின் பிறப்பிடம், வளர்ப்புப்பண்ணை, சேமகலம் - திராவிடப் பெருங்குடி மக்கள் வாழும் இத்திருவிடமே !

நிலவுலகம் இன்றைய வடிவமடைந்த பின்னும், இன்று உலகில் வாழும் நாடுகள், இனங்கள், மொழிகள் பிறக்குமுன், அவற்றின் பெயரை வரலாறு அறிவதற்கு நெடுநாள் முன்னரே வளம்பெற்றுப் புகழ் நிறுவிய மாண்ட இனங்கள் பல. அந்த மாண்ட இனங்களுக்குமுன் பிறந்து, அம்மாண்ட இனங்களுடன், அவற்றின் பல தலைமுறைகளுடன் கூடிக் குலாவி, அவற்றுடன் கலைத்தொடர்பும் வாணிகத் தொடர்பும், குடியேற்றத் தொடர்பும் அரசியல், சமுதாயத்தொடர்பும், நாகரிகத்தொடர்பும் கொண்டு பின் அம்மாண்ட இனங்கள் அழிந்தபின்னும் அவற்றின் தூதுவராகி இன்றைய உலகின் புதிய இனங்களிடையேயும் பொன்றாது வாழும் காலங்கடந்த கடவுள் நிலம் இதுவே!

இன்று நிலவும் இனங்களின் வாழ்வு கடந்தும் வருங்கால உலகின் அவாவாய் இன்னும் காலங்கடந்து, உலகின் கனவார்வங்களைத் தன் கருவில் கொண்டு பேணும் கருநிலமாய் இயங்கும் எழிலார்ந்த தாய்நிலம் இவ்வாழ் நிலமே எனலாம்.


2. மேலைத் தொடர்பு

இரண்டாயிர ஆண்டுகளுக்கு முன் நிலவுலகாண்ட உலகப்பெரும் பேரரசு உரோமகம். அதன் மாமன்னர்களும் மணிமுடி தாங்கிய அரசியரும், இளங்கோக்களும், நாகரிக உயர்குடி நங்கையரும் தமிழ-