பக்கம்:இதுதான் திராவிடநாடு.pdf/5

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பதிப்புரை

திராவிடம் என்றால் என்ன? அச்சொல் எப்போது தோன்றியது ? அஃது எம்மொழிக்கு உரியது? அதன் பொருள் யாது? திராவிடநாடு என்பது யாது? அஃது ஒரு தனி நாடாகுமா? அது தனித்து வாழ வேண்டுமா? அவ்வாறு வாழத்தான் இயலுமா? என்பன போன்ற வினாக்களுக்கு இந்நூலில் விரிவாக விடை விளக்கம் காணலாம்.

'தென்றல்' என்னும் வார இதழில் தொடர்ந்து பல கட்டுரைகளாக வெளிவந்த பொருளே, பின் இன்றியமையாத சீர்திருத்தங்களோடு,இன்று இந்நூலுருவம் பெற்றுத் திகழ்கின்றது.

பன்மொழிப் புலவர், கா. அப்பாதுரைப் பிள்ளையவர்களைத் தமிழுலகம் நன்கறியும். அவர் தமக்கேயமைந்த தனி நடையில் இந்நூலை எழுதிச் சென்றிருப்பதை, இந்நூலைக் கற்போர் எளிதில் அறிவர். ஆசிரியருடைய மொழிப்பற்றினையும், நாட்டுப் பற்றினையும், இந்நூலிற் பரக்கக் காணலாம்.