பக்கம்:இந்தியா எங்கே.pdf/183

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ்.டி. சுந்தரம் 181

வேல்

மன்

வேல்

மன்

வேல்

மன்

ஞான

எல்லையில்லாத கொடுமைச் சாகரத்திலே தத்தளிக்கும் என்னிடம் பேசாதே போ.

மடப்பெண்ணே! தேடிவரும் செல்வத்தை எட்டி உதைக்கிறாயே.

செல்வத்தை மட்டுமல்ல, தருபவர்களையும் உதைக்கு முன் வெளியேறிவிடு வேட்டை நாயே.

ஆ என்னை நாயென்றா சொன்னாய்?

நான் மட்டும் சொன்னால் பிசகாகும்.

சே என்ன கேவலம்! ஒரு அடிமை நாய், என்னை

நாய் என்று அழைத்த பின்னும் பேசாதிருப்பதா? (கட்ட7/7 எடுத்து, சே. எண்ணற்ற பொன் கொடுத்து வாங்கிய இவளைச் சிறிதேனும் சுவைக்காமல் கொல்வதா...? அடி. என்ன சொன்னாய். இம்சிக்கும் சமயம் ஒளிந்துகிடந்த இன்பக்கொடி வந்து தடக்க அவளைக் குத்திவிட்டு மேலும் இம்சிக்கையில், அங்கு வேல் விழியைச் சந்திக்க வேண்டி ஆவலோடு பிரவே சித்த ஞானதேவன் கடும் சண்டையிடுகிறான். அவன் கை ஒன்று ஒடிகிறது. கடைசியின் சே7ர்வு ஏற்படும் சமயம் வேல்விழி தந்த கட்ட7ரியால் பலவாறு குத்தி குத்தி):

அடா கொடுமையான மலையே! தெரிந்து கொண்டாயா என்னை ஒழிந்து போ. கக்கிவிடு. உன் உயிர் போகுமுன், நீ தேனெனப் பருகிய ஏழைகளின் இரத்தத்தை ஒரு துளியுமின்றி வெளியே கக்கிவிடு. பாதகா இப்போதாவது உணர்ந்து பாரடா? நீ செய்த பாதகங்களின் கொடுமையை உணரும் சக்தி உனக்கேது? இன்னுமா துள்ளுகிறாய்? தொலைந்து போக, கடைசிக் காலத்திலும் நீ ஒரு பெறற்கரும் பாக்கியத்தை இழந்துவிட்டாய். அந்த உத்தமன் வானழகனின் கையால் கொலைபட்டிருந்தால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/183&oldid=537750" இலிருந்து மீள்விக்கப்பட்டது