பக்கம்:இந்தியா எங்கே.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94

வான்

நம் தாய்

சொல்லி உங்களுக்கு விலங்கு போட்டால்தான் சொன்னபடி கேட்பீர்கள்! ஆமாம், அங்கு போவதாக என்னிடம் ஒரு வார்த்தை கூறினர் களா? ஏதாவது ஆபத்து நேர்த்திருந்தால், ஐயோ எவ்வளவு பயங்கரமான இடம். எண்ணவே மனம் நடுங்குகிறதே! நான் ஒருவள் உயிரோடி ருப்பதே உங்களுக்குப் பிடிக்கவில்லை என்றால், இதோ இந்தக் கட்டாரியால் கொன்று விட்டு, உங்கள் மனம் போனபடி எல்லாம் திரிவதுதானே. வீணர்க எதற்கு இப்படி எல்லாம் சித்ரவதை செய்து என்னை அணு அணுவாகக் கொல்ல வேண்டும்?

(அழுகைக் குரல் அடடா! வேல்விழி. அழாதே கண்ணே! உளவறிவதோடு திரும்பி விடலாமென்று தான் தலைநகருக்குள் சென்றேன். ஆனால், மூண் டெழுந்த பழியுணர்ச்சி என்னையே மறக்கச் செய்து பொன்மேனி ராயனின் மாளிகைக்குள் தள்ளிக்கொண்டு போய்ச் சேர்ந்துவிட்டது. ஆனால், உன் கணவன் இவ்வளவு சுலபமாக எதிரிகளிடம் அகப்பட்டுக்கொள்ளும் பலகீனன் என்று எண்ணி நீ அழுவதுதான் என்னையே அவமானப் படுத்துவது போலிருக்கிறது. நீ சொன்னபடியே நான் எவ்வளவு எச்சரிக்கை யோடு இத்தகைய காரியங்களையெல்லாம் செய்து வருகிறேன் தெரியுமா? இதோ பார். இரவில் நான் வெளியே செல்லும்போது என் தோற்றத்தின் மாற்றத்தை, நீ பார்த்ததில்லையே! இங்கு வாயேன் அதைப்பார்த்தால் இப்படி எல்லாம் பயந்து சாகும் கோழைத்தனத்தை விட்டுவிடுவாய். இதோ.பார் இன்னும் தேம்பிக் கொண்டு தானே இருக்கிறாய்? எங்கே. பாரேன் இப்படி. இங்கே. அழமாட்டேன் என்று சொல். சிரிப்போடு சொல்லவேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இந்தியா_எங்கே.pdf/96&oldid=537658" இலிருந்து மீள்விக்கப்பட்டது