பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒரு துறைக் கோவை 137

வலம் வருதல்; ஒக்கல் - சுற்றம்; மகாரதர் - பெருவீரர்; தரவல்லை - கொடுப்பதில் வல்லமையுடையாய் இ ன் க ண் தரவல்லையல்லை - இனிய பார்வையைப் பி ற ரு க் கு அளிக்கவல்லா யல்லை; இன்கண் - இனிய பார்வை; அருள்நோக்கம். வல்லை தர - வல்லாம் முலைகளைத் தர; இன்கண் தர வல்லையல்லை - இனிய கண் பார்வையை வெளிப் படுத்த வல்லமையுடையா யல்லை; கண்ணை ம ைற த்து ள் ள ா ய் என்பதாம்.

ジ382

வஞ்சங்கைக் கொண்டவர் தன் பா லனுகா வகையுயர்ந்து தஞ்சங்கைக் கொள்ளென் றடைந்தார்க் கெளிது தழுவுதற்கா நெஞ்சங்கைக் கொண்டவன் சீராச ராச னெடுங்கிரிவாய் நஞ்சங்கை நீக்கலி ரெல்லார் தெரிந்து கயமில்லையே.

வஞ்சம் - கபடம், பொய், .ெ கா டு ைம தஞ்சம் கைக்கொள் - அடைக்கலமாக ஏற்றுக்கொள்; எளிது தழுவுதற்காம் - எளிமையாய் ச் சேர்த்துக்கொள்வதற்காம்; நம் சங்கை நீக்கலிர் - நமது ஐயத்தை

நீக்கிரீைரில்லை; எல்லாம் தெரிந்தும் - முழுவதும் அறிந்தவராயிருந்தும்; நயமில்லை - விரும்பும் தன்மை இல்லை; நஞ்சு அம் கை நீக்கலிர் - நஞ்சுபோன்ற கண்ணிலிருந்து அழகிய கையை எடுத்திரில்லை; எல்லாம் தெரிந்தும் - முழு அவயவமும் தெரியப்பட்டும்.

283

கொம் புகை வைத்த களிறுTர்ந்து செங்களங் கொண்டபுகழ் பம் புகை வல்லவர் கோன்ராச ராசன் பனிவரை வாய் எம்புடை வெந்தன மென்றுசொ லாம லிருக்கவற் ருே அம்புகை மாற்றினிர் வெம்பிய காமத் தழலிறைத்தே.

கொம்பு கை வைத்த களிறு - தந்தத்தின் மேல் தும்பிக்கையை வைத்த ஆண் யானை, செங்களம் - போர்க் களம்; பம்புகை - நிறைகை; பனி - குளிர்ச்சி; புடை - பக்கம்; எம் பக்கம் நெருப்பால் சுடப்பட்டோம் என்று சொல்லாமலிருக்க முடியுமோ, வருத்தும் காம நெருப்பை வீசி அழகிய புகையை அப்புறப்படுத்தினிர் என்பது வெளிப்படை. காமத் தழல் - காமமாகிய நெருப்பு; வெம்தனம் - விருப்பம் செய்யும் முலை; அம்பு கை மாற்றினிர் - அம்பு போன்ற கண்ணைக் கையால் மறைத்துத் தெரியாது செய்திர்.

18