பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ΧΧΧΙV இராசராசேசுவர சேதுபதி

இராசராசேசுவர சேதுபதி காலத்தில் நவராத் திரி விழா

பாஸ்கர சேதுபதி காலத்தில் விமரிசையாக நடைபெற்று வந்த நவ ராத்த |f விழா, அவருக்குப் பிறகு அவருடைய பிள்ளை இளவரசராயிருந்த பொழுது சிறப்பாகக் கொண்டாடப்படவில்லை. இராசராசேசுவர சேது பதி சமஸ்தானப் பொறுப்பை ஏற்றுக் கொண்டபிறகு பழைய C) _ITE வுடன் கொண்டாடப்படலாயிற்று. விரோ திகிருது uத்து நவராத்திரி விழா பற்றி மு. இராகவையங்கார் எழுதியதின் ஒரு பகுதி வருமாறு:

'மாட்சிமை தங்கிய இம்மன்னரவர்கள் (பூரீ ராஜராஜேச்வர சேதுபதி வேந்தரவர்கள்) , அம்பிகையின் பேரருளை நா டி நடத்திய இவ்வருவடித்து நவராத்திரி மஹோத்ஸவம், மிக விமரிசையா யிருந்தது மட்டுமன்றி, சேது சமஸ்தானத்தின் புரோ விர்த்திக்குச் சிறந்த முன்னறிகுறியாகவும் அமைந்ததென்றே சொல்லத்தக்கது. இவ்வுத்ஸவ தினங்களெல்லாம் மஹாராஜா அவர்கள் திருமுன்பு நடந்த வித்வத் ஸதஸ்-களும், சங்கீத கோஷ்டிகளும் பரதநாட்டியங் களும், பற்பல வாத்திய கீதங்களும் அனைவரையும் மிகவும் ரஞ்சிக்க செய்தன. தென்னாட்டிற் கீர்த்திபெற்ற சங்கீத வித்வான்களெல்லாம் இம்மஹோத்ஸவத்திற்கு வந்திருந்து ராஜசபையில் தங்கள் அரிய ஸாமர்த்தியங்களைக்காட்டி, மஹாராஜா அவர்களால் கொண்டாடப் பெற்றுத் தக்கபடி சம்மா னிக்கப் பெற்றார்கள்.

இவ்வாறே ஸம்ஸ்கிருத வித்வான்களிற் பலரும், தமிழ்வித்வான் களிற் பலரும், ராஜசபையை நாளும் மகிழ்வித்து வந்ததோடு, நம் வேந்தரவர்கள் அம்பிகையின் தரிசனத்தின் பொருட்டு விஜயமாகும் ஒவ்வொரு நாளிரவும் பகலும், அவர்கள் மேற் பற்பல பாக்கள் 'குடி வாழ்த்தியும் வந்தார்கள். இவ்வாறாக, ஒன்பதாம் நாளாகிய சரஸ்வதி பூஜையன்று, பூரீமத்சேதுபதி மஹாராஜா அவர்கள், ஸகல ராஜ வைபவங்களுடனும், பேரத்தாணி மண்டபத்தில் வீற்றிருந்து, நவராத்திரி விஷேசத்தின் பொருட்டு வந்திருந்த வித்வான்கட்கெல்லாம் ஏற்றவாறு தோடாக்கள் தங்கப் பதக்கங்கள் முதலிய பரிசுகள் அளித்து மகிழ்வித்தார்கள். அன்று நடந்த வித்வத் சபையானது காண்டற்கரியதோர் அற்புதக் காட்சியாகவே விளங்கியது.

மறுநாள் மஹா விஜயதசமி தினமாதலால், அன்றுமாலை, மாட்சிமை தங்கிய நம் மன்னரவர்கள், ஐராவதம்போல அலங்கரிக் கப்பெற்று விளங்கிய யானையின் மேல், அம்பாரியில் ஆரோகணித்து லகல ராஜாங்க கோலா கலத்துடனும், ஸ்வர்ண ஸிம்மவாகனத்தில்