பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/54

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 இராசராச சேதுபதி

நிலத்தையிட்டு, என்னே - என்ன பயனாவது என வேறொரு பொருளும் தோன்றும். முலை-முல்லை மாலை, முல்லை மாலை அணிந்து காக்கும் திருமாலின்றேல் முல்லை பூத்தலால் பயன் இல்லை: மனத்தை நுகரும் தலைவன் இல்லை என்பது.

திருமலை யத்து மிமயத்தும் வான் கவி சேரவைத்துப் பெருமலை யொத்த புயத்துப் புவிமான் பிறங்கவைத்த தருமலை யிகையன் சீராச ராசன் றமிழ் வரையார் பொருமலை யீர்தன ரீந்தில ரீதிறும் பூதுடைத்தே.

திரு மலையத்தும் - அழகிய பொதிய மலையிடத்தும்; இமயத்தும்இமயமலையிலும்; கவி - குரங்கு, இங்கே அனுமன். வான்கவி சிறந்த அனுமக்கொடி, சேதுபதிகளுக்குரிய கொடி. புயம் - தோள்: புவிமான்நிலமகள்; சேரவைத்து - ஒருசேர நாட்டி, புயத்துப் புவிமான் பிறங்க வைத்தல் - நிலமகளைத் தம் தோள்களில் தாங்கி அரசாளுதல்; தருகற்பகமரம்; தரு மலை ஈகையன் - இவர்தம் கொடைத்திறம் கண்டு கற்பகதருவும் மலைக்கும்படியான பெருங்கொடையுடையான்; தமிழ் வரை-தமிழ்மலை. பொருமலையீந்தனர் - ஒன்றை ஒன்று ஒத்த மலை யாகிய முலைகளைத் தந்தனர். ஒன்றை ஒன்று தாக்கிப் போரிடுகின்ற முலைகளை என்றும் ஆம். பொரும் அலை ஈந்திலர் - போர்புரிகின்ற அலையாகிய கண்களைத் தந்திலர். ஒன்று ஈந்தனர், அந்நிலையே ஒன்று ஈந்திலருமாதலால் இஃது ஆச்சரியமுடைத்து என்பதாம். பொருமலை ஈந்தனர் ஈந்திலர் - என்பதற்கு பொருமுதன்ல ஈநதனர், அந்நிலையே அதனை ஈந்திலருமாயினார் என்று வேறு ஒருபொருளும் கொண்டுநிற்றல் காணத்தகும்.

7

மல்லமை யாகப் பெரும்படை வேந்தன் வறுமைவெப்பஞ் செல்லமை யாகப் பொழிராச ராசன் சிகரியன்னிர் வல்லமை யாகமுன் காட்டியென் மைச்ச மன்னுகையாற் சொல்லமை யாத மதன்போரி னிர்வென்றி சூடரிதே.

மல் அமை ஆகப் பெரும்படை - மல்யுத்தம் செய்வதற்குத் தகுதியான வலிமை படைத்த பெரும்படை, மல் - மல்யுத்தம்; வலிமை வறுமை வெப்பம் - வறுமையாகிய கோடை, செல்ல மையாகப் பொழி - வறுமை