பக்கம்:இராசராச சேதுபதி ஒருதுறைக் கோவை.pdf/58

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10 இராச ராச சேதுபதி

15

விண் மலர் கற்பக மொப்பப் புவியின் விளங்குகொடைத் தண்மல ரங்கைத் தயாரிதி பாற்கரன் தந்தமுல்லே யொண் மலர் மாலேயன் சீராச ராச னுயர் கிரிவாய்க் கண் மலர் காட்டிலே கொங்கை முன் காட்டினை காரிகையே.

விண் மலர் கற்பகம்-வானுலகில் விளங்கும் கற்பகமரம் ; புவி-உலகம் , தயாநிதி-கருனைக்கடல் பா ற்கரன்-பாற் கரசேதுபதி: சீரா சராச சேது பதியின் தந்தையா ர் மதுரைத்தமிழ்ச்சங்கம் தோற்றுவித்த புரவலர். தந்த-பெற்ற ஒண் மலர் - ஒளி படைத்த பூ, முல்லை மாலை சேதுபதி களுக்குரிய தனி அடையாள மாலையா (கம். கள் மலர் காட்டிலைதேனையுடைய மலரைக் காண்பித்தாயல்லை; கொங்கை முன் காட்டினை-அம் மலரின் மணத்தை முன்னே காட்டினை கொங்குமனம், பூந்தாது ; கொங்கை - முலை. கண்மலர் காட்டிலை -.கண்ணாகிய மலரினை வெளிப்படுத்தாது மறைத்துள்ளாய். கொங்கை முன் காட்டினை - தனத்தை முற்படக் காண்ச்செய்தாய். முல்லைத் தார் மற மன்னர்' ' என்பரா கலின் மறவருக்கு முல்லைமாலை உரியது என்பது அறியல. ம்.

14

அடன் மண்டு வெம்போர் மறவர்க் கதிபதி யஞ்சொன்மினர்

மடன் மண் டு மன்மதன் சீராச ராசன் வரையகத் தீர்

இடன் மண்டு மட்டில் பெருந்தன பார மிவண்சுமந்துங்

டன் மண்டு கையுடன் றேன்றற்குக் காரணங் கண்டிலமே.

அடல்மண்டு-கொலை மிகுந்த , வெம்போர் - கொடிய யுத்தம்; மற வர்க்கு அதிபதி-வீரர் தலைவன்; அம்சொல் மினார்-அழகிய பேச்சினை யுடைய மின்னார், மின்னல் போல் ஒளிபடைத்த பெண்டிர். மடல்மண்டுமடல் ஏறுவதற்காக நெருங்கி வரும்; மன்மதன் - மன்மதனைப் போன்ற பேரழகன்; இடன்மண்டு மட்டு இல் பெருந்தன.பாரம் இவண் சுமந்தும்இடம் நிரம்பிய அளவில்லாத பெரிய நிதிப் பொறை ஈங்குச் சுமந்து நின்றும்; கடன் மண்டுகையுடன் தோன்றற்குக் காரணம் கண்டிலம்கடன் நிரம்புதலுடன் தோன்றுவதற்குரிய காரணம் தெரிந்திலேம். இடன் மண்டு பெருந்தன.பாரம் சுமந்தும் - மார்பிடம் நி ர ம் பி ய அளவுபடுதலில்லாத பெரிய முலைப்பொறையை ஈங்குச் சுமந்து நின்றும் ; கடல்மண்டு கையுடன் தோன்றற்குக் காரணம் கண்டிலம்கடலாகிய கண்கள் நிரம்பிய கையோ டு தோன்றுவதற்கான ஏது தெரியோ மாயினேம். பெருந்தனமிருந்தும் கடன் மண்டும் கையுடன் தோன்றல் முரண் என்றவாறு .