பக்கம்:இருண்ட வீடு, பாரதிதாசன்.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

இருண்ட வீடு

29

திருடனைத் தேள் கொட்டிற்று.

திருடன் இருப்பதைத் தலைவர் அறிந்து அங்கிருந்த விளையாட்டுத் துப்பாக்கியை எடுத்தார்.


அவன்தன் காலை அயலில் பெயர்த்தான்;
கௌவிற்றுக் காலைக் கடுந்தேள் ஒன்று
கடுந்தேள் அகற்றக் காலை உதறினான்;
தகரப் பெட்டியில் தன்கால் பட்டதால்
தடாரென்றெழுந்த சந்தடிக் கிடையில்
கள்ளன் உட்புறக் கதவில் நுழைந்தான்
தலைவர் சடுதியில் விளக்கை ஏற்றினார்.
கதவில் திருடன் பதுங்கி இருப்பது
வெளியில் இடுக்கால் வெளிப் பட்டதினால்
தலைவர் தமது தலையைச் சாய்த்துக்
கத்தியைக் கள்ளனைக் கண்ணால் பார்த்துப்
பின் வாங்கும்போது பெட்டியின்மேல்
கைத்துப் பாக்கி வைத்திருப்பதைக்
கண்டார்; அதனைக் கையில் எடுத்தார்.
விளையாட்டுக்கு வெடிப்பதாயினும்
அந்தத் திருடனை அஞ்ச வைக்கலாம்
என்று தலைவர் எண்ணியிருந்தார்

41