பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

125 இருபது ஆண்டுகள் தனித்து இயங்க முடியாது-ஏதாவது ஒரு பக்கம் சேர்ந்துதான் வாழமுடியும் என்ற நிலை ஏற்படுமானால், எந்தப் பக்கம் ஆதிக்கம் செலுத்தும் வலிவுடையதோ அங்கு சேர்ந்துகொள்ள வேண்டியதுதான்! வீழ்த்தப்பட்டுப் போவ தைக் காட்டிலும், வீழ்த்தும் வலிவு தேடிக் கொள்வது நல் லது--- இது நெப்போலியன் கொண்டு விட்ட கொள்கை. நிலைத்து நிற்பது கொள்கை; நேர்மையுடன் கொள் கையைக் கடைபிடிக்க வேண்டும்; வேளைக்கு ஒரு கொள்கை, நாளைக்கு ஒரு கட்சி என்று மாறுவது தவறு. அதிலும் சுய நலத்துக்காக மாறுவது, மிகக் கேவலம். எவரும் மறுக்கொணாத, எவருக்கும் எளிதிலே புரியத் தக்க, எவராலும் போற்றிப் பாராட்டத்தக்க, இந்தக் கருத்து, நெப்போலியனுக்குத் தெரியாதா? மிக நன்றாகத் தெரியும்! படித்த ஏடுகள் கொஞ்சமா! சிந்தித்த காலம்தான் குறைவா!! கரு உருவில் இருந்து வந்த நோக்கம் பெரிதாக வளர்ந்து வளர்ச்சி காரணமாக வடிவத்திலே மாற்றம் கொண்டுவிட் டது என்று கூறுவதுதான், பொருத்தமாக இருக்கும். கோழைத்தனமும் சுயதலமும் நெப்போலியளை மாற்றிவிட வில்லை. கார்சிகா விடுதலை என்பது, துவக்கத்தில் மிகப் பெரிய சாதனை என்று அவன் மனதிலே தோன்றிற்று. காலம் மாறிற்று. கருத்தும் மாறிற்று! கார்சிகா, உள்ளங்கக அளவுள்ள தீவு!இதிலே ஆதிக்கம்: பெற்றுத்தான்என்ன பலன்? உலகறியும் வீரனாகவா முடியும். வெற்றி பெற்றால், தீவின் தலைவனாகலாம்--எந்தச் சமயம் எந்த எதிரிக் கப்பல் வரு கிறதோ என்ற திகிலுடன் இருக்கவேண்டும்; தோற்றுவிட் டால், பாரிசில், சந்தைச் சதுக்கத்தில், வெட்டுப் பாறையிலே வீழவேண்டும். இதற்கா, திரட்டி வைத்துள்ள ஆற்றல் பயன் படுவது. பிரான்சிலே பிடிதேடிப் பெற்றுக் கொள்ள வேண் டும்; பிறகு பிறநாடுகள்; பேரரசு; காலத்தை வெல்லும் கீர்த்தி பெறவேண்டும்- இது நெப்போலியனுடைய புதிய கோட்பாடாகிவிட்டது.