பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/134

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இரத்தம் பொங்கிய இத்தாலியைத் தாக்க, மிக உயரமான, பனி நிரம் பிய, ஆல்ப்ஸ் மலையைக் கடந்தாக வேண்டும் என்று திட்ட மிட்டான் - கேட்போர் மலைக்கத்தக்க திட்டம். 134 ஆல்ப்ஸ் மலையை முன்பு அனிபால் எனும் இரணகளச் சூரன் கடந்ததுண்டு. உலகம் வியந்தது. நெப்போலியன், வேறு எவராயினும் இதனைச் செய் திருப்பர் என்று கூறிடத்தக்க செயலை நடாத்திக் காட்டு வது போதாது என்ற எண்ணம் கொண்டவன். இதற்கு முன்பு இதுபோலச் செயலாற்றியவர் எவரும் இல்லை!- என்று எவரும் வியந்து கூறத்தக்க செயல்களைச் செய்வதி லேயே நாட்டம் மிகுதியும் கொண்டிருந்தான். எது நடைபெறாது என்று மாற்றார் நம்பிக் கொண்டி ருக்கிறார்களோ, அதனை நடத்திக் காட்டுவது எதிரி முகா மைக் கிடுகிடுக்க வைத்துவிடும் என்பதனை நெப்போலியன் அறிவான். ஒவ்வொரு களத்திலும், இதனை நோக்கமாகக் கொண்டு, கேட்போர் திடுக்கிடத்தக்க செயலாற்றி, வீரக் காதை தீட்டியபடி இருந்தான். ஆல்ப்ஸ் மலையுச்சியைக் கடந்து படை வர இயலுமா? என்று எண்ணி ஏமாந்து கிடப்பர், மாற்றார்கள். மலையைக் கடந்து நம்படை எதிரே சென்று நின்றால் போதும், பீதி எதிரியின் வலிவிலே பாதியைச் சாகடித்துவிடும் என்று அறிந்து திட்டமிட்டான், வீரத்தளபதி. ஆல்ப்ஸ் மலையைக் கடப்பதற்கான திட்டத்தை, மிகத் திறமையாக, தீரயோசித்து வகுத்தான். இயற்கை விளைவிக்கக்கூடிய கொடுமைகளையும் சமாளிக்க வேண்டும், எதிரிப்படைகளின் தொல்லைகளுக்கும் ஈடுகொடுக்க வேண் டும். படைவீரர்கள் மட்டுமல்ல, பீரங்கி வண்டிகளும் மலை யைக் கடந்தாக வேண்டும். உணர்ச்சி ஊட்டத்தக்க தலைவ னால் மட்டுமே, இத்தகைய மகத்தான செயலைச் செய்யும் படியான வீரத்தை படையினர் பெறச்செய்ய முடியும்! நெப்போலியன், தான்கொண்டிருந்த நம்பிக்கையைப் படை யினர் அனைவரும் பெறத்தக்கவிதமாக நடந்து கொள்வான்.