பக்கம்:இரும்பு முள்வேலி, அண்ணாதுரை.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருபது ஆண்டுகள் அளித்தான்---இது ஒரு பெருந்தலைவனுக்கு இழுக்கு என்று சிலர் குற்றம் சாட்டினர். போர் நிறுத்தம் ஏற்பட்டது- கார்டினியா சமாதான மாகப் போகச் சொல்லி வேண்டிக் கொண்டது. பிரான்சு நாட்டு ஆட்சிக் குழுவினர், சமாதான ஒப்பந்தும் செய்து கொண்டு, அதனைக் களத்திலே இருந்த நெப்போலியனுக்கு அறிவித்தனர். "சார்டினியாவிடம் செய்துகொண்ட சமாதான ஒப்பந் தம் வரப்பெற்றேன். படை, அந்த ஒப்பந்தத்துக்கு ஒப்பம் அளிக்கிறது" என்று நெப்போலியன், அரசுக் குழுவினருக்கு அறிவித்தான். நெப்போலியன் எழுதிய முறைகண்டு, அரசு நடாத்தும் பொறுப்பாளர்கள் அஞ்சினர். படை ஒப்பம் அளிக்கிறதாமே-கேட்டீர்களா இந்தப் பேச்சை - - பார்த்தீர்களா இந்தப் போக்கை- புரிகிறதா இத னுடைய உட்பொருள்: நாம் அரசு நடாத்துகிறோம். நமது நாட்டுப் படைகளிலே ஒரு பிரிவை நடத்தச் சொல்லி நாம் வேலை கொடுத்தோம்-இவன் எழுதுகிறான், நமக்குப் படை ஒப்பம் அளிக்கிறது என்று. போர் தொடுக்க, போர் நிறுத்த. அரசு உரிமை பெற்றது- முழு உரிமை. அரசு பிறப்பிக்கும் ஆணைக்கு ஏற்றபடி, படை நடந்து கொள்ளவேண்டும். இதுதானே ஆட்சி, மக்களாட்சி! படை ஒப்பம் அளிக்கிற தாமே. ஆணை பிறப்பிக்கும் அரசுக்கு! இது என்ன முறை? படை ஒப்பம் அளிக்கவேண்டும் என்றா எழுதிக் கேட்டோம். ஏதோ நாம் எழுதிக்சேட்கக் கடமைப்பட்டவர்கள் போலவும், அதன்படியே, எழுதி அனுப்பியது போலவும், அரசு செய்து கொள்ளும் ஒப்பந்தத்தை மறுக்கும் உரிமைகூட படைக்கு இருப்பது போலவும், ஆனால் ஏதோ தயவு வைத்து ஒப்ப அளிப்பது போலவும் அல்லவா இருக்கிறது, நெப்போலியன் பயன்படுத்தும் வார்த்தைகள்.