பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/135

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



125 சூத்திரம்-உங) இறையனார் அகப்பொருள் எனத் தலை மகளைத் தன் ஆயத்தோடுஞ் செல்வாள்போலக் கொண்டுசெல்லும். அவ்வகை போவாரை இடைச்சுரத்துக் கண்டாற் சொல்லியதற்குச் செய்யுள் ; தெறிவிலக்கிக் கூறல் " அலைமனனு பைங்கழற் செங்கோல் அரிகே சரியளியார் இலைமன்னு மாலைமுத் தக்குடை யானிகல் வேந்தரைப்போல் மலைமன்னும் வெய்யோன் மறைந்தனன் மாதுமெய் வாடிநைந்தாள் சிலைமன்னு தோளண்ணல் சேர்ந்தனை செல்லெஞ் சிறுகுடிக்கே.' () ' நின்றாங் கெதிர்ந்தார் குருதியுள் ஆழ நெடுங்களத்து வென்றான் விசாரிதன் கூடலன் னாளு மிகமெலிந்தாள் குன்றார் சுடரோன் மறைந்தனன் கூர்வேல் விடலை தங்கிச் சென்றால் அழிவதுண் டோ அணித் தாலெஞ் சிறுகுடியே.' (கஅகூ) ‘எம்மூர் அல்ல தூர்நணித் தில்லை வெம்முரட் செல்வன் கதிரும் ஊழ்த்தனன் சேர்ந்தனை சென்மோ பூந்தார் மார்ப இளையள் மெல்லியள் மடந்தை அரிய சேய பெருங்கல் ஆறே.' (ஐங்குறுநூறு, இணைப்பு-6) இன்னும் இடைச்சுரத்துக் கண்டார் இவ்வாறுஞ் சொல்லும்: நகரணிமை கூறல் ' நீயும் இவளுமின் றேசென்று சேர் திர்நெல் வேலியொன்னார் தேயும் படிசெற்ற தென்னவன் தென்புனல் நாட்டிளையோர் வாயும் முகமும் மலர்ந்த கமல மணித்தடத்துப் பாயுங் கயலவர் கண்போல் பிறழும் பழனங்களே.' (கஅச) பிற்றைஞான்று மகளது போக்கு உணர்ந்து செவிலி மயங் கிப் பெரியதோர் கவலையளாய், 'நெருநலை இவை செய்தது இது கருதிப்போலும்' என்னும்; அதற்குச் செய்யுள் : கவன்றுரைத்தல் 'ஒண்முத்த வார்கழற் கைதந்தென் ஊறா வறுமுலையின் • கண்முத்தங் கொண்டு முயங்கிற்றெல் லாங்கரு வெங்கழைபோய் விண்முத்த நீள்சுரஞ் செல்லிய வோவிழி ஞத்து வென்ற தண்முத்த வெண்குடை யான் தமிழ் நாடன்ன தாழ்குழலே.' ()