பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



128 இறையனார் அகப்பொருள் (களவு ' கொடுவிற் படைமன்னர் கோட்டாற் றழியக் கணையுதைத்த நெடுவில் தடக்கையெங் கோனெடு மாறன் தென் நேரிமுன்னால் இடுவிற் புருவத் தவள் நின்ற சூழல் இது உது வாம் கடுவில் தொடுகணை யாலண்ணல் எய்த கதக்களிறே. (ககரு ) பின்சென்ற செவிலித்தாய் எதிர்வருவாரைக் கண்டு வினவ, அவ்வினவப்பட்டார் தலைமகளையும் தலைமகனையும் இன்னதோ ரிடம் சேர்வர்கள் என்னுமதற்குச் செய்யுள் : அழுங்குதாய்க்குரைத்தல் ' ஆளையும் சீறும் களிற்றரி கேசரி தெவ்வரைப்போல் காளையும் காரிகை யுங்கடஞ் சென்றின்று காண்பர் வெங்கேழ் வாளையும் செங்கண் வராலும் மடலிளந் தெங்குகுத்த பாளையும் தேறல் பருகிக் கவிக்கும் பழனங்களே.' (ககசு) 'நகுவா யனபல பெய்துள்ள நட்டாற் றருவரைபோன்று உகுவாய் மதக்களி றுந்திவெண் றான் மனம் போன்றுயர்ந்த தொகுவா யனசுனை சேர்குன்றம் நீங்கலும் துன்னுவர் போய்ப் பகுவா யனபல வாளைகள் பாயும் பழனங்களே.' இடைச்சுரத்துப் புலம்புஞ் செவிலியை எதிர்வருவார் கண்டு தெருட்டியதற்குச் செய்யுள் : (ககள்) உலகியல்புரைத்தல் 'கடவரை காதல னோடு கடந்த கயல்நெடுங்கண் படவர வல்குலும் பாவைக் கிரங்கல்மின் பண்டுகெண்டை வடவரை மேல்வைத்த வானவன் மாறன் மலயமென்னுந் தடவரை தானே அணிந்தறி யாது தண் சந்தனமே.' (கசுஅ ) 'வெந்நீர் அருஞ்சுரம் காளைபின் சென்றதும் மெல்லியன்மாட்டு இந்நீர் மையினிரங் கன்மின் நரையாற் றிகலரசர் தந்நீர் அழிவித்த சத்ரு துரந்தரன் தண்குமரி முந்நீர் பயந்தால் அணிவார் பிறரென்ப முத்தங்களே.' (ககக) 'நெருங்கடல் வேல்நெடு மாறன் நெடுங்களத் தன்றுவென்றான் பெருங்கடல் ஞாலத்துப் பெண்பிறந் தார் தம்பெற் றார்க்குதவார் இருங்கடல் போல் துயர் எய்தன்மின் ஈன்றன வென்று முந்நீர்க் கருங்கடல் வெண்சங் கணிந் தறி யா தண் கதிர்முத்தமே.' (200) ‘எறித்தரு கதிர் தாங்கி யேந்திய குடை நீழல் உறித்தாழ்ந்த கரகமும் உரைசான்ற முக்கோலும் நெறிப்படச் சுவலசைஇ வேறோரா நெஞ்சத்துக் குறிப்பேவல் செயல்மாலைக் கொளை நடை அந்தணீர்