பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/140

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



130 இறையனார் அகப்பொருள் (களவு வழிச்செல்வோரை வரவுரைமின் என்றல் ‘செம்மைத் தனிக்கோல் திறல்மன்னன் சேவூர்ச் செருமலைந்தார் தம்மைப் புறங்கண்ட சத்துரு துரந்தரன் தன்முனைபோல் வெம்மைச் சுரம்வரு கின்றனள் என்று விரைந்து செல்வீர் அம்மைத் தடங்கணென் னாயத் தவருக் கறிமின்களே.' (205) ' கோடரில் நீள்மதிற் கோட்டாற் றரண்விட்டுக் குன்றகஞ்சேர் காடரில் வேந்தர் செலச்செற்ற மன்னன்கை வேலின்வெய்ய வேடரில் வெஞ்சுரம் மீண்டனள் என்று விரைந்து செல்வீர் ஒடரி வாட்கணென் ஆயத் தவருக் குரைமின்களே.' (202) 'கவிழ்மயிர் எருத்திற் செந்நாய் ஏற்றை குருளைப் பன்றி கொள்ளாது கழியும் சுரநனி வாரா நின்றனள் என்பது முன்னுற விரைந்தனிர் உரைமின் இன்னகை முறுவலென் ஆயத் தோர்க்கே.' (ஐங்குறு-கூகஎ) அல்லதூஉம், மகள் வருகின்றாள் எனக் கேட்ட தாய், 'நம் நெடுநகர்க்கே கொண்டு வருமோ ? தன் கடிமனைக்கே கொண்டுபோமோ?' என, அவன் குறிப்பறிதற்கு வேலனைக் கூவியறியும்; அதற்குச் செய்யுள் : வேலனை வினுதல் ' அங்கண் மலர்த்தார் அரிகே சரிதென்னர் கோனயில்போல் வெங்கண் நெடுஞ்சுரம் மீண்ட விடலை கெடலருஞ்சீர் நங்கள் மனைக்கே வரால்கு மோசொல்லு வேல! நல்கு தங்கள் மனைக்கே செலஉய்க்கு மோமற்றென் தையலையே.' (20x) 'உருமினை நீள்கொடி மேற்கொண்ட செங்கோல் உசிதன் எங்கோன் செருமுனை போல்சுர மீண்ட விடலையெக் தீதில்செல்வத் திருமனைக் கேவர நல்குங்கொல் அன்றாய் விடில் தமர்கள் பெருமனைக் கேயுய்க்கு மோவுரை யாய்மற்றென் பேதையையே.' () ' அருஞ்சுரம் இறந்தஎன் பெருந்தோள் குறுமகள் திருந்துவேல் விடலையொடு வருமெனத் தாயே புனைமாண் இஞ்சி பூவல் ஊட்டி மனை மணல் அடுத்து மாலை நாற்றி உவந்தினி தயரு மென்ப யானும் மான்பிணை நோக்கின் மடநல் லாளை ஈன்ற நட்பிற் கருளான் ஆயினும் இன்னகை முறுவல் எழையைப் பன்னாள் கூந்தல் வாரி நுசுப்பிவர்ந் தோம்பிய