பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/146

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



136 இறையனார் அகப்பொருள் (களவு விரித்து உணர்த்தும் இடத்து என்றவாறு; தந்தை தாயே தன்னையர் என்றாங்கு அன்னவர் அறியப் பண்பு ஆகும்மே என்பது - தந்தை தாய் தன்னையர் என்று அவர் அறியப் பண்பாகும் என்றவாறு. பண்பு எனினும், இலக்கணம் எனினும், இயல்பு எனினும் ஒக்கும். வெளிப்படை யென்பது அறத்தொடுநிலை என்ற வாறு. வெளிப்படை எனினும், அறத்தொடுநிலை எனினும் ஒக்கும் என, இவ்விரண்டும் ஒரு பொருள்மேற் கிடந்தன வாயினும், கருத்து வேறுபாடுடையவாம். யாவரும் அறியப் படாத களவு, தந்தையும் தாயும் தன்னையரும் அறியப் பாடு நிகழ்ந்தமையின், களவு வெளிப்படை யெனப்பட்டது; இனித், தலைமகள் அறன் அழியாமை நிற்றலின், அறத்தொடுநிலை யெனவும் பட்டது. (உசு) சூத்திரம் - உஎ அவருள் தாயறி வுறுதலின் ஏனோரும் அறிப. என்பது என்னு தலிற்றோ எனின், இவர் தாம் அறியுமிடத்துத் தாய் சொல்லவன்றித் தாமாக அறிவிலர் என்பது உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள் : அவருள் என்பது - மேற்கூறப்பட்ட மூவருள்ளும் என்றவாறு; தாய் அறிவுறுதலின் ஏனோரும் அறிப என்பது - தாய் அறிவுறுக்கப்பட்டுத் தந்தையும் தன்னையன்மாரும் அறிவர் என்றவாறு. - எனவே, செவிலித்தாய் தோழியால் அறத்தொடு நிற்கப் பட்டு நற்றாய்க்கு அறத்தொடு நிற்கும்; அம்முறையானே, நற்றாய் தந்தைக்கும் தன்னையன்மார்க்கும் அறத்தொடு நிற்கும் என்பது. செவிலித்தாய் நற்றாய்க்கு அறத்தொடு நிற்கும் என்பது பெற்றவாறு என்னை யெனின், உரையிற்கோடல் என்னுந் தந்திரவுத்தியாற் பெறுதும் என்பது. (உஎ )