பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



சூத்திரம்-கூ0) இறையனார் அகப்பொருள் 149 பகல்வருகென்றல் ' அடிமேல் அகலிடம் எல்லாம் வணக்கி அமரர் தங்கோன் முடிமேல் வளைபுடைத் தோன்நெடு மாறன் முன் னாளுயர்த்த கொடிமேல் உருமதிர் கூரிருள் வாரல்மின் நீர்மகிழும் படிமேற் பகல்வம்மின் வந்தால் விரும்புமென் பல்வளையே.' (உஙO) என்பது கேட்டு, பான் இரவுவந்தொழுகப் பொறாளாய்ப் பகல் வம்மின் என்கின்றது எனக்கருதி வரைந்து புகுவானாம். இனிப், பகல்வருவானை இரவுவருகென்றற்குச் செய்யுள் : இரவுவருகென்றல் ' அஞ்சா தெதிர்மலைந் தாரமர் நாட்டுட னேமடிய 'நஞ்சார் இளங்கிலை வேல்கொண்ட தென்னனன் னாடனைய பஞ்சார் அகலல்குல் பாற்பகல் வந்தாற் பழிபெரிதாம் பஞ்சார் சிலம்ப வரவென்ன ஊனம் மயங்கிருளே.' (உகூக) என, இதுசொல்லப் பகல் வருவேனை இரவு வருகென்றது இவ்வொழுக்கம் பொறாமையினாம் என வரைந்து புகுவானாம். கிழவோன் தன்னை வாரல் என்றல் இனி, 'கிழவோன் தன்னை வாரல் என்றலும்' என்பது, தலைமகனை இரவின்கண்ணும் பகலின்கண்ணும் வாரல் என்று சொல்லுதல்; அதற்குச் செய்யுள் : இரவும் பகலும் வாரல் என்றல் ‘ஓதம் கடைந்தம ரர்க்கமு தாக்கி உணக்கொடுத்துப் பூதம் பணிகொண்ட புழியன் மாறன் பொதியிலின்வாய் ஏதம் பழியினொ டெய்துத லாலிர வும்பகலும் மாதங் கடைந்தமெல் நோக்கி திறத்தைய வாரல்மினே.' () 'கறங்குவெள் ளருவி பிறங்குமலைக் கவா அன் தேங்கமழ் இணர வேங்கை சூடித் தொண்டகப் பறைச்சீர்ப் பெண்டிரொடு தொகைஇ மறுகு வாங்குஞ் சிறுகுடிப் பாக்கத்து இயல்முரு கொப்பினை வயநாய் பிற்படப் பகல்வரிற் கௌவை அஞ்சுதும் இகல்கொள இரும்பிடி கன்றொடு விரை இக் கயவாய்ப் பெருங்கை யானை கோட்பிழைத் திரீஇ அடுபுலி வழங்கும் ஆரிருள் நடுநாள் தனியை வருதல் அதனினும் அஞ்சுதும்