பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/192

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



182 இறையனார் அகப்பொருள் (கற்பு சூத்திரம் - சரு புகழும் கொடுமையும் கிழவோன் மேன. என்பது என்னுதலிற்றோ எனின், தலைமகற்கு உரியதோர் இலக்கணம் உணர்த்துதல் நுதலிற்று. இதன் பொருள் : புகழும் கொடுமையும் என்பது - புகழ் என்பது தக்கான் எனப்படுதல்; கொடுமை என்பது தகான் எனப்படுதல் என்றவாறு; கிழவோன் மேன என்பது - அவை இரண்டும் தலைமகன்கண்ண என்றவாறு. எனவே, இத்தன்மைத்துத் தலைமகன் ஒழுகலாறு என்ற வாறு. அஃதாமாறு தலைமகள் மாட்டு உறைந்தக்கால் தக்கான் எனப்படுதலும், பரத்தையர் மாட்டு உறைந்தக்கால் தகான் எனப்படுதலும் என்றவாறு. யாராலோ அவை சொல்லப்படுவது எனின், வாயில்களான் எனக் கொள்க. அவர், 'புகழுடையன்' என்பதற்குச் செய்யுள் : தக்காள் என்றல் 'கோடிய நீள்புரு வத்து மடந்தை கொழும்பணைத்தோள் வாடிய வாட்டம் உணர்ந்து மனையிடை வந்தமையால் ஆடியல் யானை அரிகே சரிதெவ்வர் போலகன்று நீடிய காதலர் தாமே பெரியர் இக் நீள் நிலத்தே .' (உ அக) இனி, அவர், ' தகான்' என்றதற்குச் செய்யுள் : தகாள் என்றல் ‘ விண்டுறை தெவ்வர் விழிஞத் தவியவெள் வேல்வலங்கைக் கொண்டுறை நீக்கிய கோன்வையை நாடன்ன கோல்வளையில் வண்டுறை கோதை வருந்தால் லாரில்லுள் வைகுதலால் தண்டுறை சூழ்வயல் ஊரன் பெரிதும் தகவிலனே.' (உக0) என்பது. (கஉ)