பக்கம்:இறையனார் அகப்பொருள்.pdf/201

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



சூத்திரம் - ருஉ) இறையனார் அகப்பொருள் 191 இதன் பொருள் : நிலம் பெயர்ந்து உறையும் எல்லாப் பிரி வும் என்பது - பரத்தையிற் பிரிவொழித்து எல்லாப் பிரிவும் என்றவாறு; ஒழிந்தோர் அறியவும் அறியாமையும் என்பதுதலைமகளும் தோழியும் அறியவும் அறியாமையும் என்றவாறு; கழிந்து சேட்படும் இயற்கைய என்ப என்பது- காடிடை யிட்டும் நாடிடையிட்டும் அகன்று உறைதற்றன்மையர் என்று சொல்லுவர் புலவர் என்றவாறு. எனவே, 'ஓதல் காவல் பகை தணி வினையே பா-த வேந்தற் குற்றுழி பொருட்பிணிப் பிரிவு.' ' (இறையனார் கரு) என, இவற்றிற்குப் பிரிகின்றவன் தலைமகளையும் தோழியையும் அறியச்சொல்லிப் பிரிதலும் உடையன், அறியாமைப் பிரியவும் உடையன், இரண்டும் இலக்கணம் என்பது. அவற்றுள் அறியாமைப் பிரிதல் பொருத்தமின்று. அறியப் பிரிவது, 'யான் இன்னதோரிடத்து இன்னதோர் கருமம் முடித்து வருவேன்' என அவளை உடன்படுத்துப் பிரி வதே தக்கது. அல்லது, அவன் சொல்லாது பிரிந்தவிடத்து, 'இவ்வகை சொல்லாது பிரிதற்குக் காரணம் என்னை கொல்லோ' எனவே கவல்பவாகலின், அஃது அறியாமைப் பிரிதல் என்பது. சிலநாள் இடையுடைத்தாக ஓரதிகாரம்படுத்து, 'இங்ஙனம் பிரிந்து ஒரு கருமம் முடித்துக்கொண்டு வந்தார் தலைமக்கள், தலைமகளிரும் அவர் அது முடித்து வருந்துணையும் ஆற்றி யிருந்துவந்தார், இஃது உலகின துபண்பு' என்னும். என, 'ஒக் கும்பிற, தலைமகன் பிரிந்து பொருள் முடித்து நின்றக்கால் தலை மகளிர் ஆற்றாராபவே' எனின், ' அவரது ஆள்வினையை இடை யூறு செய்தாராவர் பிற, அதனால், அவர் பிரிந்து பொருண் முடித்து வருந்துணையும் ஆற்றுவதேயாகாதே செய்யப்படுவது' என்னும். என, 'ஆற்றுவேன்' என்றாள், இடையுடைத்தாலோ என்பதனான். என்னை, சாதலும் கெடுதலும் எல்லாவுயிரும் அறியுமேயெனினும் செத்தாலோ என்பதனாற் கலங்கார் மனன்; அன்னது இவட்கும் ஆம் என்பது, இங்ஙனம் உணர்த்திவைத் தார் பிரியும் நாளது கதுமெனக் கலங்கி ஆற்றாளாகவும் போவது சாந்தன்மையான் என்பதனால் பெற்றதே இலேசாகப் பிரிவது கருமம் என்று முற்படாது பிரிதலும் உடையன் என் பது. " அந்நாள் ஆற்றுவேன் என்றாயன்றே, ஆற்றாளாவதற்